பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கச் சங்கிலி அம்புஜத்தின் பிறந்தகத்திலிருந்து திரள் திரளாக வந்து என் வீட்டில் முகாம் போட்டுச் செளக்கியமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பவர்கள் அநேகம்பேர். பெயரைச் சொன்னல் அவரவர்களுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்து விடும். மனுஷ்ய சுபாவமே அப்படித்தானல்லவா ? அவர் க ளே ச் சொல்லி என்ன பயன் ? சாதாரண நாட்களிலேயே அவளு டைய பந்துக்கள் கூட்டம் போடுவார்கள். மேலும் இந்தக் கிறிஸ்மஸ்ஸின் போது சொல்லவா வேண்டும்? அவசியமான லன்றிப் பிரயாணம் செய்யாதீர்கள் ' என்று ரயில்வேக் காரர்கள் என்னதான் விளம்பரம் செய்தபோதிலும் அதை இவர்கள் லட்சியம் செய்வதில்லை. இவர்களுக்காக நான் பழைய வீட்டை விட்டு இப்பொழுது ஒரு பெரிய வீட்டை வாடகை பேசி எடுத்துக் கொண்டேன். வீடு கலியாணம் பட்ட பாடாயிருக்கிறது. முந்தா நாள் நாலு வீசைக் காப்பிக் கொட்டை வாங்கினேன். இன்று மறுபடியும் என் மனைவி, 'யாரங்கே ! உங்களைத்தான் ! காது என்ன மந்தமாய்ப் போச்சோ? நான் ஒருத்தி இருக்கிற வரைக்கும் உங்களுக்கு அப்படித்தானிருக்கும். காப்பிக்கொட்டை ஆயிடுத்துன்னு காலம்பர பிடிச்சு சொல்றேனே ; காதிலே விழலே ? ஏன்ன?’’ என்கிருள். என்னத்தைப் பண்ணுகிறது? சதா சர்வ காலமும் வேலைக்காரன் காப்பிக்கொட்டை இடித்தபடியே இருக் கிருன் ! காப்பி கலக்கிய கங்காளத்தை வேலைக்காரி துலக்கிக் கொண்டே யிருக்கிருள் வந்திருக்கும் பரிவாரங்களுக்குத் தினமும் சினிமா போக நான் பணம் கொடுக்க வேண்டும். அதுவும் இரண்டாம் வகுப்பு டிக்கட்டு வாங்கிக் கொடுக் கனும் ! நான் பணம் கொடுக்காவிடில் அம்புஜத்திற்குக் கவலையே கிடையாது. அவளிடம்தான் என்னுடைய பீரோ வுக்கு வேறு. சாவி இருக்கிறதே! இன்றைக்கு சினிமா, நாளேக்கு டிராமா அதற்கடுத்த நாள் கண்காட்சிகள், சங்கீதக் கச்சேரிகள், வேருெருநாள் மீன் காலேஜ் இப்படி தினமும் என்னுடைய பணமெல்லாம் பீரோவினின்றும்