பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்காவனம் பொன்னிக்கு இப்போது பதினெட்டு வயதாகிறது. நல்ல அழகுடையவள். விஷமத்தனம் நிறைந்த பார்வை. ' பொல்லாத பொன்னி என்று கிராமத்தார்கள் கூப்பிடு வார்கள். பூங்காவனமும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவனே. பொன்னியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவன் ஒரே ஏக்கமா யிருந்தான். சதா அவள் ஞாபகந் தான். அவளுடைய அழகிலும், துடி துடிப்பான பார்வை யிலும், மணி மணியான பேச்சிலும் அவன் மயங்கிப் போய் விட்டான். பூங்காவனம் இருந்த கிராமத்திற்குப் பக்கத்தில் பட வேடு என்ருெரு பெரிய கிராமம் இருந்தது. அங்கே காளி கோவில் ஒன்று உண்டு. அந்தக் காளி கோவிலின் முன்பு வருஷா வருஷம் வெகு விமரிசையாகப் படவேட்டம்மன் திருவிழா நடக்கும். தேர் ஊரைச் சுற்றி நிலைக்கு வருகிற வரைக்கும் தாரை தப்பட்டைகளின் சத்தம் காதைப் பிய்த் துக்கொண்டு போகும். கிராமத்திலுள்ளவர்களுக்கு எல்லாம் படவேட்டம்மன் திருவிழா என்ருல் ஒரே கொண்டாட்டம், அதிலும் பெண்களுடைய குது.ாகலத்திற்கு அளவே கிடை யாது. அவ்வளவு கூட்டத்திற் கிடையில் வளையல் போட்டுக் கொள்வதிலும், மக்காச் சோளம் வாங்கிக் கடிப்பதிலும், தேரடியில் தேங்காயுடைத்துத் தின்பதிலும் அவர்கள் அடைந்த சந்தோஷ்த்திற்குக் கங்கு கரையே கிடையாது. சிறுவர்களோ, ரங்கராட்டினம் சுற்றி அகமகிழ்வார்கள். அந்தத் திருவிழாவுக்குப் பொன்னி ஒரு தடவை சென் றிருந்தாள். பூங்காவனமும் வந்திருந்தான். பொன்னிக்குப் பூங்காவனத்தை மிகவும் நன்ருகத் தெரியும். அவனுடன் பேசிச் சிரித்து விளையாடுவது எல்லாம் உண்டு. ஆகவே