பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f §2 இமளனப் பிள் ை. . வருந்தினன். ஐயோ, பொன்னிக்கு அநியாயமாய் ஒரு ரூபாய் தண்டம் வைத்தோமே !’’ என்று மனம் துடித்தான். சில தினங்களுக்குப் பிறகு பூங்காவனம் பொன்னியைக் கண்டு முன்பு திருவிழாவின்போது கொடுத்த ரூபாயைக் கேட்டான். - ரூபாயா? நல்லா வாங்கிக்குவிங்க கத்தரிச் செடி யிலே ஆடு வாயை வச்சிடுச்சின்னு பவுண்டிலே அடைச் சுட்டீங்களே ! அந்த ஆடுகளை மீட்டு வர ஒரு ரூபாய் தண்டம் அழுதேனே ! அதை யார் கொடுப்பது ? உங்க ளுக்கு நான் கொடுக்க வேண்டுமென்று வெச்சிருந்த ரூபாய் சரியாப் போயிடுச்சு வாங்கின கடனக் கொடுத்திட்டேன். இனி என்னை ரூபாய் கேக்காதீங்க ' என்று கண்டிப்பாகவும் சிரித்து மழுப்பியும் கூறிவிட்டாள். பூங்காவனம் அந்த ரூபாய் திரும்பி வரவில்லையே என்று வருத்தப்படவே யில்லே. அதற்குப் பதிலாகப் பொன்னியின் சாமர்த்தியத்தையும் சாதுர்யமான பேச்சையும் கண்டு அதிசயப்பட்டான். அவன் ஏற்கெனவே பொன்னியின் மீது வைத்திருந்த அன்பு இப்போது பன்மடங்காயிற்று. பொன்னியை எப் படியும் மணந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். அப்படித் தீர்மானிக்கும்போது பொன்னி மட்டும் தனக்குக் கிடைக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டான். சிக்கிரமே அவன் பிரார்த்தனை பலித்தது. திருமணமும் நடந்தது. அன்று ஆடி கிருத்திகை. பூங்காவனம் வீட்டு உத்தரத் தில் வெகு நாட்களாக ஒரு புதுச்சட்டி தொங்கிக்கொண்டி ருந்தது. அது கைக்கு எட்டாத உயரத்தில் ஊசலாடிக் கொண் டிருந்ததால் அதற்குள் என்ன இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளப் பொன்னி இத்தனை நாட்களாக அவ்வளவாகச் சிரத்தை கொள்ளாமலிருந்தாள். திடீரென்று அன்றைக் கென்னமோ பூங்காவனத்தினிடம், அந்தச் சட்டியிலே என்ன இருக்கு ?' என்று கேட்டாள்.