பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியுகக் கர்ணன் 71. அப்படியானல் சரி ' என்று அட்டிகையை வாங்கிக் கொண்டாள் சித்ரலேகை. பாலகோபால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார். திருமண விஷயமாக சித்ரலேகை எவ்வித உறுதியும் கூற முடியாது என்று சொல்லியும்கூடப் பாலகோபாலின் நம்பிக்கை சிதைந்து போகவில்லை. எப்படியும் அவளிடம், தான் தயாள குனம் படைத்தவன் என்று பெயரெடுத்துவிட வேண்டும் என்ற திடமான லட்சியத்துடன் இருந்தார். ஆனல் கங்காதரனைப்பற்றி மட்டும் அவ தக்கு அடிக்கடி நினைவு வந்தது. அவனிடம் பணம் காசு ஒன்றும் கிடையாதென்று மட்டும் அவனைப் பார்த்தபோதே தெரிந்துவிட்டது. பணமில் லாதவனைச் சித்ரலேகை மதிக்கமாட்டாள் என்பது மட்டும் நிச்சயம். அவளேதான் சொல்வியிருக்கிருளே, த i ன் டாம்பீகச் செலவு செய்பவள் என்று. அப்படிப்பட்டவள் கங்காதரன மணந்து கொண்டு எப்படிக் காலம் தள்ள முடியும் என்று பாலகோபால் யோசித்தார். சித்ரலேகையும் அவ்விதமே யோசனை செய்தாள். பாவகோபால் எனக்காகப் பதியிைரம் ரூபாய் கொடுத் தல்லவா வைர அட்டிகை வாங்கி வந்திருக்கிருர் ? அவர் எவ்வளவு பெரிய பணக்காரராயிருக்க வேண்டும் ? அவர் வாங்கிக்கொடுத்த அட்டிகையை விற்றதினுல் அல்லவா இத்தனை நாள் கஷ்டமின்றி ஜீவிக்க் முடிந்தது? எனக் கென்று அப்பா இந்த வீட்டைத் தவிர வேறு ஒரு சொத்தும் வைத்துவிட்டுப் போகவில்லையே? கங்காதரன மணந்து கொண்டு கஷ்டப்பட என்னல் முடியாது. பாலகோபாலனே மணந்துகொள்ள வேண்டியதுதான்' என்று முடிவு செய்தாள் சித்ரலேகை. உடனே பாலகோபாலனைப் போய்ப் பார்ப்பதற்குக் கிளம்பின்ை. - வேதனையுடன் உட்கார்ந்து பல வாறு யோசித்துக் கொண்டிருந்த பாலகோபாலனுக்குச் சித்திரலேகையைக் கண்டதும் ஆச்சரியமாகப் போய்விட்டது.