பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மெளனப் பிள்ளையார் முதலியார் ஊரைவிட்டுப் போனது போஸ்ட்மாஸ்டர் சம்பந்தம் பிள்ளைக்குக் கையில் இரண்டு தேங்காய் உடைத்துக் கொடுத்த மாதிரி இருந்தது. முதலியார் வீட்டுக் குடும்ப வம்புகளையெல்லாம் அறிந்துகொள்ளச் சந்தர்ப்பம் வாய்த்த தல்லவா ? சிங்கப்பூரிலிருந்து முதலியார் தன் மனைவிக்கு எழுதும் கடிதங்களை எல்லாம் பிரித்துப் பார்த்தால் முதலி யார் குடும்ப் ரகசியங்களெல்லாம் இனி வெளிப்பட்டுப் போகுமல்லவா? என்று நினைத்து ஆனந்தமடைந்தார். சம்பந்தம்பிள்ளை எண்ணியபடி ஒருநாள் சிங்கப்பூரி லிருந்து முதலியார் வீட்டுக்கு ஒரு கவர் வந்தது. போஸ்ட் மாஸ்டர் உடனே அதை எடுத்துக் கொண்டுபோய் ஒரு தனி அறையில் வைத்துக் கொண்டார். அவருடைய மார்பு பட படவென்று அடித்துக் கொண்டது. J பிரித்துப் பார்த்ததும் அது ரத்தின முதலியாருடைய கையெழுத்தா யிருப்பதைக்கண்டு சம்பந்தம் பிள்ளை பு காங்கிதம் அடைந்தார். - சிங்கப்பூர் 17–2–38 நான் சிங்கப்பூருக்குச் சௌக்யமாய் வந்து சேர்ந்தேன். ஒரு விஷயத்தை உன்னிடம் வெகு நாளாகச் சொல்ல வேண்டுமென்று இருந்தேன். நமது தோட்டத்தில் ரொம்ப ஆழத்தில் ஒரு பானையில் 2,000 ரூபாய் வெள்ளி நாணயங்களைப் போட்டுப் பத்திரமாய் மூடி வைத்திருக்கிறேன். அதைச்சீக்கிரத்தில் யாருக்கும் தெரியாமல் தோண்டி எடுத்துக் கொள். அதைச் செய்வதற்கு முன்னல் போளுருக்குப் போய் முனியாண்டிக்குப் பூசை போட்டு விட்டுத் திரும்பி வா. இது பக்கத்து வீட் டாருக்குத் தெரிந்தால் சொத்து போய்விடும். ஜாக் கிரதை பணத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி விடு. இப்படிக்கு, ரத்ன முதலியார்.