பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மெளனப் பிள்ளையார் இதைப் படித்ததும் பிள்ளை ஓடோடிச் சென்று இந்த விஷ யத்தைத் தன் மனைவிக்குத் தெரிவித்தார். ஒருவரை ஒருவர் பார்த்துச் சந்தோஷப்பட்டனர். ரூபாய் இரண்டாயிரம் அதுவும் அந்த முதலியாருடையது. ஆஹா சரியானபடி அகப்பட்டுக் கொண்டான். அதை நாம் போய்த் தோண்டி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்' என்று தீர்மானித் தனர். அன்று இரவே அடுத்த வீட்டு முதலியார் சம்சாரம் போளுருக்கு வண்டி கட்டிக்கொண்டு போனதையும் பார்த்தனர். மறுநாள் இரவு நடுநிசிக்குமேல் முதலியார் வீட்டுத் தோட்டத்தில் பிள்ளைவாளும் வேலையாட்களும் மண்வெட்டி சகிதம் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் ஐம்பது இடங்களில் குழிபறித்துப் பார்த்தார் கள். முதலியார் கடிதத்தில் கண்டிருந்தபடி புதையல் அகப் படவில்லை. தோட்டம் முழுதும் நெடுகப் பள்ளம் வெட்டி யதே கண்ட பலன். பிள்ளையவர்கள் பெரிய ஏமாற்றத்துடன் பொழுது விடிய ஐந்து மணிக்குச் சோர்ந்து போய்ப் படுக்கலாஞர். இரண்டு நாள் கழித்து முதலியாரின் மனைவி ஊரினின்றும் வந்து சேர்ந்தாள். தோட்டப் பக்கம் வந்து பார்க்க, தோட்டத்தில் ஆழமாய்ப் பல குழிகள் தோண்டப்பட்டி ருந்தன. அப்பொழுதே அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன் புருஷன் ரகசியமாகத் தன்னிடம் சொல்லிவிட்டுப் போனபடி அவள் அந்தக் குழிகளில் வாழைக் கன்றுகளைப் பதியன் போட்டு வளர்த்தாள். வாழைக் கன்றுகள் குலு குலுவென்று தழைத்தோங்கின.