பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளலாப் பிள்ளையார் : ஒரு நகரத்துக்குப்போய்க் காட்டு மூலிகைகளை விற்றுவிட்டு, வந்துகொண்டிருந்தான். அப்போது நல்ல இருட்டு. மூன்ரும் பிறை தினம். அஸ்தமித்து ஒரு ஜாமத்துக்கு மேலாகிவிட்ட தால் வானத்தில் அரிவாளைப் போன்றிருந்த சந்திரனும் மறைந்து போயிருந்தான். நக்ஷத்திரங்களின் வெளிச்சம் அப்பாசாமிக்குச் சிறிதும் பிரயோஜனமற்றதாயிருந்தது. அப்போது ஏதோ ஒரு திசையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டான். தீக்குச்சியைக் கொளுத்தி, அழுகை எழுந்த பக்கம் நோக்கினன். அழகான ஆண் குழந்தை ஒன்று அங்கே படுத் துக்கொண்டிருந்தது. ஒன்றரை வயதிருக்கும். யாரோ திருடர்கள் கொண்டு வந்து நகைகளைக் கழற்றிக்கொண்டு அதை அங்கே விட்டுப் போயிருக்க வேண்டும் என்று அப்பா சாமி யூகித்தறிந்தான். அந்தக் குழந்தையையும் எடுத்து இன்னெரு தோளில் சாத்திக்கொண்டு குடிசைக்கு வந்து சேர்ந்தான். . غلأول. பானுவும் ராஜூவும் வெகு அன்னியோன்னியமாய் வளர்ந்து வந்தார்கள். மனித சஞ்சாரமற்ற அந்தக் காட்டில் அவர்களுக்கு அணில்களும் ப ற ைவ க ளு ம் க ல் லு ப் பிள்ளேயாருமே துணை. அப்பாசாமி அரச மரத்தின் அடியில் வெகு தூரத்தி லிருந்து ஒரு கல்லுப் பிள்ளையாரைக் கொண்டுவந்து வைத்தி ருந்தான். அந்தப் பிள்ளையாரே அவனுடைய குலதெய்வம். பானுவும் ராஜூவும் அந்தக் கல்லு ப் பிள்ளையாரைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் களித்தார்கள். அவர்கள் விளை யாட்டைக் கண்டு அப்பாசாமி சந்தோஷப்பட்டான். பானுவுக்கு ஒன்பது வயதாயிற்று. மாநிறமாயிருந் தாலும் சுருட்டை மயிர், பால் வடியும் முகம், முல்லைச்சிரிப்பு: பார்ப்பதற்கு ரொம்ப லக்ஷணமாயிருந்தாள். ராஜூவும் நல்ல அழகுடன் விளங்கினன். அப்பசாமிக்கு இப்போது காட்டு மூலிகைகள் மூலம் செலவுக்குப் போதிய வருமானம்