உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ரோஜா இதழ்கள்

பயம்தான். அதுவும் நம்ம சாதிக்கு இப்ப ஒரு மதிப்போ கட்டு காப்போ ஒண்ணும் கிடையாது. எனக்கு எல்லாம் தெரியும், துணி கிழிஞ்சு போச்சுன்னா கிழிஞ்சது தெரியாம தைக்கமாட்டா. தைச்சு வச்சா கிழிஞ்சது கிழிஞ்சதுன்னு குத்தி உருப்படியில்லாம ஆக்கிடுவா. அந்தக் குளத்தங்கரைத் தெருவில் நம்ம சாதி சனம் தான். ஒரு கையகல இடம் கொடுத்துட்டு என்ன பேச்சுப் பேசினா? இப்ப எதிர கசாப்புக் கடைதான். சுத்தி எப்படி எப்படியோ கும்பல்தான். ஆனா எங்களைப் பத்தி வம்பு பேசறவா இங்கே இல்லே. அதனால்தான் தைரியமா கூட்டிண்டு வந்தேன்.”

மதுரம் எழுந்து குழம்பைக் கிளறி மசாலைக் கூட்டி கொதிக்க வைக்கிறாள்.

மைத்ரேயி அந்தத் தாழ்வரையில் வந்து நிற்கிறாள். ஒரு சிறு தட்டி மறைப்பு. சொர்ணம் குளிக்கிறாள். மறைப்புக்கப் பால் பெட்டிக்கடைகள், சாலை.

பொம்மி கையைக் கழுவிவிட்டு கவுனில் துடைத்துக் கொள்கிறாள்.

“ரெண்டு வாளி தண்ணி கொண்டு வந்துடு... என்று மகளை ஏவுகின்றாள் மதுரம்.

“கிணறு எங்கே இருக்கு மாமி? நான் கொண்டு வரனே?” என்று கேட்கும் மைத்ரேயி வாளியை எடுக்கப் போகிறாள்.

“ஐயோ, நீ அங்கே எல்லாம் போக வேண்டாம், நான் சொர்ணத்தையே அனுப்பமாட்டேன், பொம்மி போகும். டேய் ஜிட்டு, சொக்கு? ரெண்டும் எங்கே தொலைஞ்சு போச்சுங்க?”

கோலியும் கையுமாக இரண்டு பையன்களும் ஓடிவருகின்றனர்.

“டப்பாவை எடுத்திண்டு போங்க, அவளுக்குத் தண்ணி இறைச்சுக் குடுங்கோ ... இப்ப தட்டுப் போட்டுடலாம்...” என்று சொல்லிவிட்டு, ஒரு சிறு அலுமினியக் குவளையை எடுத்துக் கொண்டு மதுரம் மாமி வெளியே செல்கிறாள். சொர்ணம் தலைசீவிப் பொட்டுவைத்துக் கொண்டு தாழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/82&oldid=1123723" இலிருந்து மீள்விக்கப்பட்டது