பக்கம்:வசந்த மல்லிகா.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

வஸந்தமல்லிகா

உண்டான பெருமைக்கும் வியப்பிற்கும் மதிப்பிற்கும் அளவில்லை. "பிரபுவே! ஏழைகளாகிய எங்களைத் தாங்கள் ஒரு பொருட்டாக மதித்து இவ்வளவு தூரம் வந்தீர்களே! அந்த அன்பு ஒன்றே போதுமே! அன்று நெருப்பில் தாங்கள் ஸஞ்சலாக்ஷிக்குப் புரிந்த உதவியையும், அவள் உயிரைக் காப்பாற்ற தாங்கள் செய்த அபூர்வச் செயல்களையும் அவள் எனக்கு விவரமாகத் தெரிவித்தாள். புருஷர் இருந்தால் இப்படியல்லவா இருக்க வேண்டும். புருஷ சிங்கமென்பது தங்களுக்கே தகும். தங்களுடைய தைரியம் யாருக்கு வரும்! அதனாலேதான் இந்த ஊர் முழுவதிலும், தங்களைப் புகழாத மனிதரே இல்லை. தங்களை நாங்கள் ஒருநாளும் மறக்க மாட்டோம்" என்று சொல்லிக் கொண்டே தனது நன்றியறிவின் பெருக்கை அடக்க மாட்டாதவளாய் ஆநந்தக் கண்ணீர் சொரிந்தாள்.

மோகன : (சிறிது வெட்கி) நான் என்ன பிரமாதமான காரியம் செய்து விட்டேன்! போதும். இதைப் பற்றி மேன்மேலும் சொல்ல வேண்டாம் - என்றார்.

கிரு : சரியான காரியம்! எங்களுக்குக் கண்ணிலும் அருமையான ஸஞ்சலாக்ஷியின் உயிரைக் காப்பாற்றிய தங்களுடைய பேருதவியைப் பற்றி புகழக் கூடாதென்றால், அந்த உத்தரவுக்கு யார்தான் கீழ்ப்படிவார்கள்? தங்களுடைய உயிரைக் கூட மதியாமல் அவள் மீது ஒரு நெருப்புப் பொறியும் படக் கூடாதென்று தங்களுடைய தேகத்தால் அவளை மறைத்து, அவ்வளவு அன்போடு காப்பாற்றிய தங்களை எத்தனை தரம் புகழ்ந்தாலும் எங்கள் மனம் திருப்தியடையுமா! ஆசையடங்குமா! இனி இந்த உயிரழிந்து, இந்த நாக்கு சாம்பலானாலன்றி, இதைப் பற்றி நாங்கள் சொல்லாமல் இருக்க முடியாது - என்றாள்.

மோகன : அதிருக்கட்டும். உன்னுடைய பெயர் என்ன?

கிரு : என்னுடைய பெயர் கிருஷ்ணவேணி. எங்களுக்கும் ஸஞ்சலாக்ஷிக்கும் யாதொரு உறவும் இல்லாவிட்டாலும், அவள் என்னுடைய சகோதரியைப் போல இருந்து வருகிறாள்.

மோகன : அவளுடைய உடம்பில் நெருப்புப் பட்ட புண் ஏதாவது இன்னமும் இருக்கிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/188&oldid=1233933" இலிருந்து மீள்விக்கப்பட்டது