உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொலிவு

115

"ஏண்டா வடிவேல்! பொதி பொதியாகக் கொட்டிக் காட்டணும்—சுருக்கமாகச் சொல்ல வேணும்னா கிராமத்துக் கட்டழகியைக் கலியாணம் செய்து கொள்ளவும் நான் தயார்னு சொல்லேன்" அவனது நண்பர்கள் கேலி பேசுவர்.

"தயார்...! என்று தயாவிஷயமாகப் பேசுவானேன். கிராமத்துப் பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன். இது உறுதி!" என்று திட்டவட்டமாகக் கூறிவந்தான்.

"சொன்னபடியே செய்தே காட்டிவிட்டானே! செல்லி அழகான பெண்தான். ஆனா அசல் பட்டிக்காடு! முகத்திலேயே அந்த முத்திரை விழுந்திருக்கு" என்று கலியாணத்துக்குப் பிறகு கூறினர். பெருமையுடன் தன் நண்பர்களிடம், "டேய், பார்த்தாயா! சொன்னபடி நடத்திக் காட்டினேன்" என்று பேசுவான். "என்னமோடாப்பா, நீ சந்தோஷமாக இருந்தாப் போதும்" என்று கூறினர்.

செல்லியைப் பொறுத்தமட்டில், பணிவிடை செய்வதன் மூலம் வடிவேலனை மகிழ்விக்க வேண்டும் என்பதிலே அக்கரையே இருந்தது. வேலப்பனிடம் கொண்டிருந்த 'பிரேமை' இனி மீண்டும் எழாது—வேறோர் திசையில் செல்லாது—ஆனால் வடிவேலனிடம் நல்ல மதிப்பு இருந்தது—சில வேளைகளிலே பரிதாபமாகக்கூட இருந்தது. நாமோ பட்டிக்காடு—இவரோ படித்தவர், பட்டணத்துக்காரர்—பணக்காரர். இவர் ஏன், இந்தப் பட்டணத்திலே எத்தனையோ பேர் ராணிபோல் இருந்தும், என்னைத் தேடிக் கண்டுபிடித்தார்? என் தரித்திரத்தைக் கண்டு பாசம் பிறக்குமா? வேடிக்கையாக அல்லவா இருக்கிறது! இங்கே உள்ளவர்களின் நடை உடை பாவனைகளிலே உள்ள நாகரிகத்துக்கும், என் போக்குக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே! எதைத் தொட்டாலும், சோப்புப் போட்டுக் கை கழுவி, உடனே ஈரம் போகத் துணியால் துடைத்துக் கொள்கிறார்கள். எத்தனையோ தடவை, கீழே எண்ணெய் கொட்டி விட்டால் எடுத்துத் தலையில் தடவிக்கொள்ளுவேன்—பிறகு முந்தானையில் துடைத்துக் கொள்ளுவேன்—நான் இங்கே,