பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தது - 33

உண்மையாயிருந்தது. அவர் நல்லவராகப் பிறந்த தாலேயே தான் ஆறு வருஷ காலம் கடும் சிறை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியதாயிற்று. அந்தக் கதையைத்தான் இங்கே சொல்ல்ப் போகி றேன், கேளுங்கள்: -

ரீவேதநாயகத்துடன் பால்யம்முதல்சேர்ந்து படித்த ஒரு நண்பன், பின்னல் இவருடன் சேர்ந்தே வியாபாரம் செய்தான். சாது மனிதரான வேத நாயகம் அந்த நண்பனேக் கடைசி வரையில் நம்பி மோசம் போனர். அவனுடன் சேர்ந்து கூட்டு வியாபாரம் நடத்தியதின் பலகைக் கடைசியில் ஒரு. மோசடி வழக்கில் அகப்பட்டுக் கொண்டார்.வழக்கு விசாரணைக்கு வந்த சமயம் அந்தக் கடும் சித்தம் படைத்த கிராதகன் வேதநாயகத்தை வம்பில் இழுத்துவிட்டு விட்டான். அவன் மட்டும் மனம் வைக் திருந்தால் வேதநாயகத்தின் மீது குற்றமில்லை. என்று ருசுப்பித்திருக்கலாம். ஆல்ை, அந்த இர்க்க மற்றவன்கோர்ட்டில்விசாரணைகடந்தவரை வாயைத் திறக்கவேயில்லை. அவ்ன் மட்டும் வாயைத் திறந்து உண்மையைச் சொல்லியிருந்தால் வேத் நாயகம் அனுப்வித்த ஆறு வருஷ சிறைவாசத்தை அவன்ல் லவா அனுபவித்திருக்க வேண்டும்? அதற்கு அஞ்சியே அந்தக் கிராதகன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம் தன்னு டைய கடித்த உதடுகளே மடித்துக் கொண்டு பொம்மை போல் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.