பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

223

“என்னம்மா?.”

“மாயன். மாயன்” என்று எதையோ சொல்ல முன் வந்து விழுங்குகிறாள் புல்லி.

“மாயனுக்கென்ன?”

மாயன் கேலனுக்கும் மரிசிக்கும் பிறந்த மகன். அவனுக்கு ஒழுங்காகப் பேச்சு வராது. ஆனால் மிகவும் வலிமையுள்ள, முரட்டுத்தனமாக பையன். இவர்களுடன் சேர்ந்து இருக்க மாட்டான். பச்சை தினம் உண்பான் என்று அவர்களுக்குள்ளே மறைவாகப் பேசிக்கொண்டது இவள் செவிகளில் விழுந்திருக் கிறது. நந்தமுனி அவனுக்குப் பேச்சுச் சொல்லிக் கொடுக்க வேதவதி ஆற்றுக்கரைக்கு அழைத்துச் சென்று முயற்சி செய்கிறார் என்று சொல்வார்கள். அவன் பக்கம் ஒரு சிறுகுழந்தையைத் தனியே கூட விட்டு வைத்திருக்கமாட்டார்களாம். அவன். அவனுக்கு என்ன?.

“ஒண்ணுமில்ல வனதேவி..” என்று மென்று விழுங்குவதை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது.

“யாரையேனும் அடிச்சிட்டானா?”

“அதெல்லாம் அவன் ஒண்ணும் செய்யிறதில்ல. இப்பல்லாம் நந்தசாமி சொல்லி, சொல்லி, வூட்டுல வச்சதுதான் தின்னுறான்.”

“பின் இந்தக் கலவரம் எதுக்கு”

”பய நச்சுக்கொட்டை எடுத்து அம்புக்குப் பூசித் தயார் பண்ணுறான். அதால் குறி தவறாமல் அடிக்கிறான். ராசா படையைக் கொன்னு இழுத்திட்டு வருவேன்று நிற்கிறான்.”

அவள் திகைத்து நிற்கிறாள்.

“ராசா படைதான் இல்லையே? குதிரை போய்விட்டதே?.”

“எங்கே போயிருக்குது? அத, புல்லாந்தரையில் மேயுது. அந்த ராசா புள்ள, படை எல்லாம் அங்குதா கூடாரம் போட்டிருக்காங்க, ஆத்துக்கு அந்தக்கரையில். குதிரை என்ன