பக்கம்:வரதன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வரதன் م - குடும்பத்துடன் முடிகொடுக்கின்ருேம் என்பாள் ; ஒ! பழனியாண்டவனே, தணிகாசலபதி, என் மைந்தன் இன்றைக்குள் வந்துவிட்டால், நான் உங்கள் கோயி லுக்கே வந்து அடிதண்டம் போடுகின்றேன் என்பாள் : கருப்பூரம் ஏற்றுவாள் ; கப்பணம் கட்டுவாள்.

=

11. தொப்பியும் பலகையும் மணி பத்தடிக்கும் சமயம் ஆயிற்று. அப்போது, அந்த ஆசிரியர், அங்குள்ளோர்களைப் பார்த்து, வரதன் வரு வான்-வருவான் என்று நாம் அரசாங்கக் காவல் நிலை யத்தாரையே நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை : சுற்றிச்சுற்றி இங்கேயே பார்ப்பதிலும் பயனில்லை. நாம் இப்பட்டணத்திற்கு அடுத்துள்ள ஊர்களிலும், கிரா மங்களிலும் சென்று தேடவேண்டும் என்ருர். அதற்கு வரதன் தந்தையாகிய தாமோதரப் பிள்ளை மிக்க வருத்தத்தோடு, இவ்வாறெல்லாம் சென்று தேடு தற்கு இங்கே யார் இருக்கின்ருர்கள் ? அதற்கு ஆளும் அம்பும் வேண்டுமே ! நான் ஒருவன் எங்கெங்கே சென்று தேடுவேன் ’ என்ருர். அப்போது அந்த ஆசிரியர் : நீங்கள் வேண்டாம், உங்களால் அவ்விதம் இயலாது. நீங்கள் இங்கேயே இருந்து அக்கம்பக்கங்களில் தேடிக்கொண்டிருங்கள். என்ைேடு யாரேனும் ஒருவர் வந்தால் போதும். நான் போய்ச் சுற்றிப்பார்த்து அவனை எவ்விதமேனும் கண்டு பிடிக்க முயல்கின்றேன் என்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/57&oldid=891184" இலிருந்து மீள்விக்கப்பட்டது