பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 வல்லிக்கண்ணன்

ஊரில், இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் நடத்தும் மில் இருக்கிறது. அங்கே தொழிலாளர் பிள்ளைகளுக்காக ஒரு பள்ளியும் நடத்தப்படுகிறதாம். அதில் 11-10-86 சரஸ்வதி பூஜை அன்று இலக்கிய விழா நடக்கும். அதில் நான் கலந்து கொள்ளவேண்டும் என்று, ஆசிரியர்கள் சார்பில் தமிழாசிரியர் இங்கே வந்து கேட்டுக்கொண்டார். இப்படி ஒரு கடிதம் மூலம் வேண்டுதல் வந்திருந்தால், நான் வர இயலவில்லை; வருத்தம் என மறுத்து எழுதியிருப்பேன். ஒரு பள்ளி ஆசிரியர் ராஜவல்லிபுரம் தேடி வந்து சிரமப்பட்ட போது என்னால் மறுக்க இயலவில்லை.

விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எனக்கு 150ரு தருவார்கள். ஆகவே, அக்டோபர் 15 வாக்கில்தான் நான் புறப்பட இயலும் இவ் வருடம் நவராத்திரி சமயத்தில் நான் சென்னையில் இருக்கலாம் என்று

நினைத்தேன். முடியாமல் போய்விட்டது.

13 சனியன்று நான் மதுரை போனேன். சென்ற முறை தங்கிய ஐடியாஸ் நிலையத்தில் தான் தமிழ்நாடு எழுத்தாளர் உறவு செயற்குழுக் கூட்டம். 20 பேருக்கு 10 பேர்தான் வந்திருந்தார்கள். கூட்டம் ஞாயிறு அன்று. மாலை மதுரையிலிருந்து புறப்பட்டேன். 4-45 மணிக்கு. திருநெல்வேலி ஜங்ஷன் சேர்கையில் 8-15 ஆகிவிட்டது. ஒட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு, 9.930க்கு பஸ் ஏறி ராஜவல்லிபுரம் சேர்ந்தால், வீட்டில் கதவை தட்டி இசக்கியை எழுப்புவது சிரமம் என்பதால், இரவு-டவுண்-தியூராயல் தியேட்டரில் மெளன ராகம் படம் பார்த்தேன்.

ரேவதி மோகன் நடித்தது. ஜனங்களுக்குப் பிடிக்கிறது. பரவால்லே ரகம் தான். ரேவதி இயல்பாக, நன்றாக, அழகாக நடித்திருக்கிறாள். கதை பழசு. ஆட்டபாட்டங்கள் அநாவசியமாக நிறைய உண்டு.

திருநெல்வேலி தியேட்டர்கள் பலவற்றிலும் இளம் வயகப் பெண்கள் இரவுக் காட்சியில் படம் பார்க்க அதிகமாகவே செல்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தியேட்டரிலும் கண்டறிய முடிந்தது.

இரவு 1-30க்கு ஜங்ஷன் ஸ்டேஷன் சேர்ந்து அங்கே தங்கினேன். அதிகாலையில் கொக்கிரகுளம் ஆற்றில் குளித்தேன். இரவில் ஸ்டேஷனில் தங்குவோர் எண்ணிக்கை அதிகம் தான். 7.30க்கு ஊர் வந்து சேர்ந்தேன்.

அன்பு

Qf. ఉ3,