பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் #33

நெய்வேலியில் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கும். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. பஸ் போக்குவரத்து கம்மி. தூரங்கள் அதிகம். எனவே சைக்கிளை பயன்படுத்துவது மிகுதி, எட்டு வயதுச் சிறுமி முதல் பற்பல வயது-வடிவப் பெண்கள் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கிற காட்சி சர்வ சாதாரணம்.

வடலூரில் ராமலிங்க சுவாமிகளின் திருச்சபை, அவர் அமைத்துவிட்டுப் போன தன்மையில், நாகரிகப்படுத்தப் பெற்று விளங்குகிறது. தரை நெடுக வழுவழு சலவைக் கற்கள். சுவர்களில் அவர் பாடல்கள் பொறிக்கப்பட்ட கறுப்பு மார்பிள் கற்கள். சபைக்குள், அடைத்த கதவுகள். அப்படி ஏழு கதவுகளாம். ஒவ்வொரு கதவை திறந்ததும் ஒவ்வொரு நிற சில்க் திரை. கடைசித் திரை விலகினால், பெரிய கண்ணாடி ஜோதி, சூடன் கொளுத்திக் காட்டுகிற போது அது அருமையான காட்சியாக ஒளிரும். இந்த நாடகத் தன வேலை பூசம் நாள் மட்டிலுமே உண்டு. தைப்பூசத்தில் சிறப்பு நிகழ்ச்சி. பெரும் கூட்டம் சேரும்.

மற்றபடி சாதாரண நாட்களில் ஒரு திரையைக் காட்டி, அதன் முன் தீபாராதனை காட்டப்படுகிறது. முதலாவது பெரிய கதவைத் திறந்ததும் தென்படுகிற நீலத்திரை அது.

ராமலிங்கர் 135 வருடங்களுக்கு முன்னே ஏற்றி வைத்த அகல்விளக்கு அணையாது எரிந்து கொண்டிருக்கிறது என்று ஒரு இடத்தில் ஒரு விளக்கு இருக்கிறது. அவர் ஏற்றிவைத்த அடுப்பு அணைக்கப்படாமலே எரிக்கப்பட்டு, தினசரி எப்போதும் சாதமும் கஞ்சியும் தயாரிக்கப்பட்டு, பசி என வந்தவருக்கு தானமிடப்படுகிறது என்று அன்னசாலை இருக்கிறது.

சிதம்பரத்தில் கனகசபை மேலே தங்கம் தகதகக்கிறது. விக்கிரகம் திருவீதி உலாவுக்கு வந்தபின் கூட, கனகசபையினுள் போய் வெறும் இடத்தைப் பார்வையிட ஒரு ஆளுக்கு ரூ.1-25 என்று டிக்கட் வைத்து, பணம் வசூலிக்கப்படுகிறது. நாங்கள் போய் பார்க்கவில்லை. அதை.

அன்பு

Q. ఢీ,

ராஜவல்லிபுரம் 10-2-85

அன்பு மிக்க சண்முகவடிவு,

எனது 5-ம் தேதிக் கடிதம் கிடைத்திருக்கும். இங்கிலீஷ் புத்தகங்கள் பெரும்பாலானவை பாழாகிப் போனது எனக்கு வருத்தம்