பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33 வல்லிக்கண்ணன்

ஊடே ஊடே குட்டைகள். அவற்றில் எல்லாம் பூத்துக் கிடக்கும் செந்தாமரைகள், வெண்தாமரைகள், தோப்புகள், குடிசைகள்.

நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் போகிற வழியெல்லாம் மேடுகள், ஏற்ற இறக்கங்கள், மரச் செறிவுகள், தோப்புகள், அவற்றிடையே வீடுகள். பூக்களும் பூச்செடிகளும், பசுமையும் குளுமையும் எங்கும்.எங்கும்.

12:45க்கு திருவனந்தபுரம் அடைந்தேன். திருவனந்தபுரத்துக்கு நான் போவது இது ஐந்தாவது தடவை. முதல்முறையாக, 1944ல் நவாப் ராஜமாணிக்கம், நாடகம் பார்ப்பதற்காக, என்னை அழைத்தார். திருச்சி, துறையூரிலிருந்து ராஜவல்லிபுரம் வந்துவிட்டு, திருநெல்வேலியிலிருந்து ரயிலில் திருவனந்தபுரம் போனேன். நவாப் காரில் ஊரையும், ஊரில் பார்க்கவேண்டிய இடங்களையும் காட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். 2. 1945ல் சிதம்பரம் என்ற நண்பன் கூட்டிச் சென்றான். சில தினங்கள் அவன் வீட்டில் தங்கி, நகரைக் கண்டது உண்டு. 3. 1960களில் ஒரு தடவை தி.க.சி.யும் நானும் தாகர்கோவில் போய், சுந்தரராமசாமியை பார்த்து விட்டு, பஸ்ஸில் திருவனந்தபுரம் போனோம். நீல. பத்மநாபன் வீட்டில் தங்கினோம். அவருடைய மாமனார் காரில் நெடுக-கோவளம், செவ்வறா முதலிய இடங்களுக்கும் - அழைத்துப் போய் காட்டினார். 4. 1975ல் யுனிவர்சிட்டி காலேஜில் ஒரு நிகழ்ச்சி, போனேன். மாணவன் ஒருவனோடு தங்கினேன். சீக்கிரமே போய்விட்டேன். மாதவனையும், மானவனையும் சந்திப்பதற்கு முன்பாக, நடந்தே நகரின் பல பகுதிகளையும் பார்த்தேன். 5. 1986 மார்ச்சில் 7, 8, 9, 10, 11 தேதிகளில். இம்முறை ஆட்டோவில் நண்பர்களைக் காணவும், டி.வி. நிலையத்துக்கும், போன போதும் திரும்பிய போதும் நகரைப் பரக்கக் காணமுடிந்தது.

என் நண்பர்கள் என்னைப் போல் தான் இருப்பார்கள்:-பாஷன் நகைகள், கோல்டு கவரிங் அணிகள் இதுகள்ளாம் மெட்ராஸ்லே தான் அழகாகவும் புதுமையாகவும் கிடைக்குது. இங்கே நல்ல நகைகள் கிடையாது. விலையும் ஜாஸ்தி. கோல்ட் கவரிங்ணு, சும்மா பித்தளையிலே புகைப்பூச்சு பண்ணி ஏமாத்துறானுங்க விலை ரொம்ப அதிகம் நகைகள் மெட்ரா சிலே தான் வாங்கணு என் மகள்களுக்குக் கூட நான் மெட்ராசிலே தான் :சங்கி வந்தேன். த ல டிசைன்களிலே அழகாக அங்கே தான் கிடைக்குது என்று நண்ப மாதவன் அழுத்தமாகச் சொல்லிப் போட்டார். ஆகவே, நான் எதுவும் வாங்கவில்லை. எல்லோரும் நலம் தானே? -

அன்பு

ఖిf. తi.