பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் #S$

மாதிரித் தான் அவையும்-அங்கே இருப்பவர்களும் செயல்படுகிறார்கள்.

சாமிக்கு சூடன்காட்டி, சூடன்தட்டை ஒவ்வொருவர் முன்னும் நீட்டுகிற ஐயன் அதில் காக போடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். பத்துப் பைசா, நாலணா என்று போடுகிறவர்கள் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் எட்டனா கூட போடுகிறார்கள்.

நான் எந்த ஊர் கோயிலுக்குப் போக நேரிட்டாலும், சூடன் தட்டில் காசு போடுவதில்லை, உண்டியலில் போடுவதுமில்லை.

நலம். நாடுவதும் அதுவே.

அன்பு

డ. చ;.

ராஜவல்லிபுரம் 30-6-86

அன்புள்ள ராதா, உன் கடிதம் மூலம் பல விவரங்களும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். கலர் டி.வி. கிடைக்காவிட்டாலும் குடிப்பதற்கு குளுகுளு கலர்' பானங்கள் கிடைத்ததும், பவுடரும் சோப்பும் அளிக்கப்பட்டதும் சந்தோஷத்துக்கு உரிய விஷயம்தான்.

உனக்குக் கல்லூரி திறந்து, மீண்டும் படிப்பு வேலை மிகுதி வந்து சேர்ந்திருக்கும். அது ஒருவகையில் இயந்திரத் தன்மையானதாக இருந்தாலும், ஒருவிதத்தில் உற்சாகம் தருவதாகத் தான் இருக்கும்.

நான் மதுரைக்குப் போய் வந்தது பற்றி அப்பாவுக்கு எழுதிய கடிதங்களில் எழுதியுள்ளேன். மதுரை நான் நேசித்த நகரங்களில் ஒன்று. இப்போது அது வெறுப்பு தரும் நகரமாக மாறிவிட்டது.

மதுரை எனக்கு முதன்முதலில் 1937ல் அறிமுகம் ஆயிற்று. அதன் பிறகு வருடம் தோறும் அதைக் கண்டு மகிழும் வாய்ப்பு அநேக வருஷங்களுக்குக் கிடைத்தது. -

அப்போதெல்லாம் மதுரை அழகு நகரமாக இருந்தது. ஜனநெருக்கடி, பஸ்-லாரிகள்- மற்றும் வேக வாகனங்கள் போக்குவரத்து மிகக் குறைவாகவே இருந்தது. மத்தியில் கோயில், அதை சுற்றிச் சுற்றி, சதுர அமைப்பாக வீதிகள் என்று நேர்த்தியான