உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 169

அபூ ஒருநாள் இரவு தனது வீட்டில் படுத்திருந்தான். அந்தச் சின்ன அறையில் திடிரென்று பேரொளி பரவியதை உணர்ந்து அவன் விழித்தான். மூலையில் இருந்த மேசை முன் அமர்ந்து ஒரு ஏஞ்சல் (ange - வான தேவதை) எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

'நீ என்ன எழுதுகிறாய்? என்று அபூ தேவதையிடம் கேட்டான்.

'கடவுளை நேசிக்கிறவர்களின் பட்டியல் (list) எழுதுகிறேன் என்று தேவதை சொன்னது.

அதில் என் பெயர் இருக்கிறதா? என்று அவன் கேட்டான். 'இல்லை என்றது தேவதை. "பரவாயில்லை. அண்டை அயலில் உள்ள மனிதர்களை நேசிப்பவன் அபூ என்று கடைசியில் எழுதிக்கொள் என்று கேட்டுக் கொண்டான் அபூ

தேவதையும் அப்படியே எழுதிக் கொண்டபின் மறைந்து போனது. -

அடுத்த நாள் இரவிலும் அபூ கண்விழித்துப் பார்க்கையில், அதே தேவதை மேசை முன் அமர்ந்திருப்பதைக் கண்டான் 'இன்று என்ன எழுதுகிறாய்? என்று கேட்டான். 'கடவுளால் நேசிக்கப்படுகிறவர்களின் பட்டியலை எழுதுகிறேன் என்று தேவதை தெரிவித்தது.

இதிலாவது என் பெயர் இருக்கிறதா? என்று அபூ கேட்டான். இதில் முதலாவதாக உன் பெயர் தான் இருக்கிறது என்று தேவதை கூறியது.

கோயிலுக்குப் போகாமல், கடவுளை நினைக்காமல், சக மனிதர்களை நேசித்து அன்பான காரியங்களைச் செய்து கொண்டிருந்தாலே அன்புக்குப் பாத்திரமானவர்கள் ஆவார்கள்.

பக்தி பண்ணுகிறேன், பூசைகள் செய்கிறேன், சாமிகளைக் கும்பிடுகிறேன் என்று பெயர் பண்ணி, வெளிச்சம் போட்டு, பணம் செலவு செய்துகொண்டு - ஆனால், மற்ற மனிதர்களிடம் பிரியமாக இராது, அவர்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாது, குறுகிய நோக்கத்துடன் வாழ்கிறவர்களை கடவுள் நேசிப்பதில்லை.

இது தான் இந்தக் கவிதையின் உயர்ந்த கருத்து. பைசைக்கிள் திருடன் என்றொரு சினிமாப் படம். பழைய படம். இத்தாலிப் படம்.