பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ , 5:ல்விக்கண்ணன்

வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? மனிதர்கள் ஏன் இவ்வாறெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்? இதெல்லாம் புரியாத வேதனை.

நான் செவ்வாய் பிற்பகல் 1-30 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலேறினேன். அந்த எக்ஸ்பிரஸ் விருதுநகரிலிருந்து திரும்பி, அருப்புக்கோட்டை மார்க்கமாக மானாமதுரை வந்து, பின் காரைக்குடி - திருச்சி போய், வழக்கமான பாதையில் வருவது. விருதுநகர் - மானாமதுரை வழியில் இப்பதான் முதல்முறையாகப் பயனம் செய்தேன். புதிய காட்சிகள். புதிய அனுபவம்.

புதிய காட்சிகள் என்று சொல்வது தப்பு. புதிய சூழல் என்று சொல்லலாம். ஏனெனில், இதர பகுதிகளைப் போலவே வறண்ட காட்சிகள். தண்ணிர் இல்லாத பெரிய ஆறுகள்-பெரும் ஓடைகள். குளப் பரப்புகள், உயர் படிக்கட்டுகளைக் கொண்ட, ஆழமான ஆனால் நீரே இல்லாத, தெப்பக்குளங்கள். இந்த வெறுமை கண்டு என் மனம் வேதனைப்படுகிறது. -

தமிழ்நாட்டின் வளங்கள் குறித்து பலரும் பாடியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் பாலாற்றிலும், பெண்ணையிலும், வையையிலும் நீர் ஒடிக்கொண்டு தான் இருந்திருக்கும். இல்லையெனில் இவ்வளவு விரிந்து பரந்த படுகைகள் தோன்றியிரா. இது பற்றி எல்லாம் நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறேன்.

இப்போது நீரே இல்லாத குளங்கள், ஓடைகள், ஆறுகள் மேலும் அதிகமாகப் பார்வையில் பட்ட போது என் உள்ளம் கனத்தது. எந்தக் காலத்திலோ நீர் நிறைந்து இருந்திருக்கக் கூடிய இவை எல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் போல் கிடக்கின்றன.

'விதியே, பிதியே. இந்தத் தமிழச் சாதியை என்ன செய்ய எண்ணியிருக்: ப்? பாரதி.

அன்பு

ఖి, డిష్,

சென்னை

  1. 3-4-39 பிரிய சகோதர, சனிக்கிழமை நான் சேலம் போகவில்லை. போகாமல் இருந்தால் என்ன கெட்டுவிடப் போகிறது என்று நினைத்தேன். போகவில்லை. பயணச் செலவுக்கு என்று அவர்கள் அனுப்பியிருந்த ரூபாய் நூறை திருப்பி அனுப்பிவிட்டேன்.

பயணம் செய்யமுடியாதபடி ஆகிவிட்டது. என் உள்ளம்