உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


பகுதிகளில் (Polar Regions) வாழும் எஸ்கிமோ, லாப்ஸ் என்னும் இன மக்கள் மரக்கறி உணவு உண்பது எங்ஙனம்! சீல், வால்ரஸ், மீன் போன்ற கடல்வாழ் உயிர்களும், கலைமான்களுமே அங்கு வாழ்கின்றன. அப்படியென்றால் புலால் மறுப்பிலிருந்து அவர்கட்கு விலக்களிக்கலாமா? என்பன போன்ற வினாக்கள் எழுகின்றன. கொங்கணக் கடற்கரையில் வாழ்பவன் மீனையே உண்டு வாழ்கிறான்.

இருக்கு வேதமும், மனுநீதியும் புலால் உண்ணலை ஆதரிக்கின்றன. இளமையில் மனுநீதியின்பால் வெறுப்புக் கொண்டதற்கு இதுவே காரணம் என்று காந்தியடிகள் கூறுகிறார். இந்திய நாட்டில் புலால் மறுப்பு பல காரணங்களால் நிலைபேறு கொள்கிறது. சிலர் குலத்தின் அடிப்படையில் உண்பதில்லை. சிலர் சமய அடிப்படையில் புலாலை வெறுக்கின்றனர். ஆனால் இவர்களெல்லாம் இன்றியமையாமை ஏற்படும்போது புலாலை ஏற்கத் தவறுவதில்லை. நோய்வாய்ப்பட்டு வருந்தும்போது, புலால் கலந்த மருந்தையும், சத்துப் பொருள்களையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. புலாலை வெறுக்கும் எல்லாச் சமயத்தவரும் பக்குவப் படுத்தப்பட்டுப் புட்டியில் அடைக்கப்பட்ட முட்டை (Oval) யை எவ்வித வேறுபாடும் கருதாமல் உண்பதைக் காண்கிறோம்.

இவ்வாறு புலாலைப் பற்றிய கொள்கைகள் பலவாறாக உள்ளன. ஆனால் இந்திய சமயங்கள்