உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. தோற்றுவாய்

‘கிரெம்லின் மாளிகை’யைப் பற்றி அறியாத அரசியல்வாதி, உலகில் யாரும் இருக்கமுடியாது. ஏன் தெரியுமா? இரும்பு மனிதன் ஸ்டாலின் அம்மாளிகையில் அமர்ந்திருந்து, அரிய பல ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி உருசியப் பெரு நாட்டை உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவாக்கி எச்சிற் புழுவாக வாழ்ந்த உருசிய இனத்தை இமயப் பெருமலையாக்கினான்; வறுமை குடிகொண்டிருந்த அம்மாநிலத்தைப் பெருமை குடிகொண்ட பேரரசாக்கினான். இவ்வரிய புகழ் பலவினுக்கும் உரிய நிலைக்களனாக விளங்கும் அப்பெருமாளிகையின் அடியில், உறுதி மிக்க டங்ஸ்டன் என்ற உலோகத்தால் ஒரு சிறிய நிலவறை கட்டப்பட்டுள்ளது. ஒன்றா உலகத்தில் பொன்றாப் பெரும் புகழை நிலை நிறுத்திச் சென்ற பன்னாட்டுச் சொல்லேருழவரின் உயர்காவியங்களும், பேரறிஞர் பலரின் அறிவியல் நூல்களும், அவ்வறையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. அணுகுண்டு, நீர்வளிக் குண்டுகளின் தாக்குதல்களுக்கும் அழியாத பெருஞ் சிறப்போடு அச்சிற்றறை அமைக்கப்பட்டுள்ளது. ஒருகால் மூன்றாம் உலகப் போரால் மக்கள் இனம்