உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வள்ளுவர் வாழ்த்து

'அது மட்டுமன்று, தான் சேர்த்த நீரை எல்லாம் எஞ்சுதல் இன்றித் தந்து உதவுகின்றது. இத்தகு மழையைப் போன்றே மக்களும் பெருமுயற்சியால் பொருளை ஈட்ட வேண்டும். அவ்வாறு பெருமுயற்சி எல்லாம் செய்து ஈட்டிய பொருளெல்லாம் உதவி பெறத் தகுதி உடையவருக்கு உற்ற உதவி செய்தற் பொருட்டே யாகும், என்பதனை உணரவேண்டும். பிறருக்கு உதவு வது தம் கடமை என்று உணரவேண்டும். அதளுல் தான் அவ்வுதவிக்குக் கடப்பாடு என்ற சொல்லைக் குறித்தேன். இதைவிடப் பொருள் நிறைந்த சொல் ஒன்று உண்டு. அதுதான் ஒப்புரவு என்பது. மாந்: தர்க்கு உதவி செய்யக் கடமைப்படுவது கைம்மாறு கருதாது உதவுவது ; பிறரது இன்றியமையாத தேவை யறிந்து உதவுவது ; தடையின்றி உதவுவது ; பிறருக்கு வளம் தந்து உதவுவது ; துன்பம் போக்க உதவுவது ; தன் துன்பத்தையும் பாராது உதவுவது மக்களது பொதுவாழ்வின் இயக்கத்திற்கு ஒத்த நிலையறிந்து உதவுவது - என்னும் இத்துணைக் கருத்துகளையும் கொண்டு விளங்குவது ஒப்புரவு என்னும் சொல்.

கண்ணம்மா : தந்தையே, உற்ற காலத்தில் உத. வும் பொருளுதவி, செயலுதவி முதலியவற்றைச் செய்வ தால் ஒப்புரவு செய்தவராகலாம் அன்ருே ?

ஆம் மகளே, ஆயினும் பொருள் உதவி தான் இவற்றுள் பெரும் உதவியாகும். அவ்வுதவியைச் செய் வதாகக் கண்ணை முடிக்கொண்டு வாரி வழங்க லாமா ?”

  • தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு