பக்கம்:வழிப்போக்கன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


இரண்டே நிமிடங்களில் அவள் திரும்பி வந்தாள். பொட்டில்லாத அவள் முகம் சோப்புப் போட்டுத் துல்லிய மாகக் கழுவப்பட்டிருந்தது. களங்கமற்ற முழுமதி போல் மாசற்று ஒளிர்ந்தது அந்த முகம்! சுந்தரம் தடுமாறினன்.

"சுந்தர் இது என்ன மூட்டை?” என்று கேட்டாள் சகுந்தலா.

"இதில் ஒரு பெரிய கதை அடங்கியிருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே அந்த மூட்டையை அவிழ்த்தான் அவன்.

"இந்தப் பெட்டிக்குள் பத்தாயிரம் ரூபாய் நகைகள் இருக்கின்றன. அவ்வளவும் திருட்டுச் சொத்து. ஜெயிலில் குறவன் ஒருவன் எனக்குச் சிநேகமானன். என்னை இதை எடுத்துக் கொள்ளும்படி அவன்தான் சொல்லி அனுப்பினான். அவன் குடும்பத்தை நான் காப்பாற்ற வேண்டுமாம். அவன் சொன்ன படியே சென்று தேடியபோது இது சித்துார் காட்டில் அகப் பட்டது. இதோ பார்" என்று சொல்லிக்கொண்டே பெட்டி யைத் திறந்து அதிலிருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தான் சுந்தரம்.

சகுந்தலா அந்த நகைகளை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். பெட்டிக்கு அடியில் இருந்த இரண்டு தாலிகளை வெளியே எடுத்த சுந்தரம் என்ன "அப்படிப் பார்க்கிறாய் சகுந்தலா; இதோ பார்த்தாயா? பாவம்! எந்த மாகராஜியின் கழுத்தில் இருந்ததோ இது? யார் கட்டிய தாலியோ?" என்று சொல்லிக்கொண்டே சகுந்தலாவிடம் அவற்றைக் கொடுத்தான்.

அவள் கைகள் நடுங்கின.

"உன் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன?" என்று கேட்டான் சுந்தரம்.

"சுந்தர்! இது என்னுடைய தாலி! இந்த நகைப் பெட்டியும் என்னுடையதுதான்....." என்றாள் சகுந்தலா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/106&oldid=1313628" இலிருந்து மீள்விக்கப்பட்டது