பக்கம்:வழிப்போக்கன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

"பிள்ளையாருக்கு விளாம்பழம் என்றால் பிரியமாம். இதில் ஒன்று பிள்ளையாருக்கு; இன்னொன்று எனக்கு!" என்றாள் சகுந்தலா.

“எனக்கு?"

"உனக்கு வீட்டிலே தாத்தா பிரம்பம் பழம் கொடுப்பார்! அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஆற்றங்கரையிலா ஆடிக் கொண்டிருக்கிறாய்?"

"தாத்தா என்னைத் தேடினாரா?"

"சுந்தர் எங்கே தொலைந்தான்? பள்ளிக்கூடம் விட்டு அரைமணி நேரம் ஆச்சே?" என்று கேட்டார்.

"நீ என்ன சொன்னாய்?"

“ஆற்றங்கரையிலே கொண்டிருப்பான்னு சொன்னேன்!"

"நிஜம்மா ?

சகுந்தலா சிரித்துவிட்டாள், "இல்லேடா, இல்லே; டிரில் கிளாசிலே இருக்கான்னு சொன்னேன்!” என்றாள்.

சுந்தர் அவளை நன்றியோடு பார்த்தான், சகுந்தலா விளாம்பழத்தைத் தின்று தீர்த்தாள். பிறகு கையில் குடத்துடன் ஊற்று நீரை நோக்கி நடந்தாள் சகுந்தலா; அவளுக்குப் பின்னால் சுந்தரும் நடந்தான்.

பானதயின் மீது உட்கார்ந்திருந்த சுந்தரம் அந்தப் பழைய இன்ப நினைவுகளில் ஊன்றித் தன்னை மறந்தவனாய், சகுந்தலாவின் பின்னால் செல்வதாக எண்ணிக்கொண்டு நடந்தான். அந்த இன்ப மயக்கத்தில் தன் கையோடு கொண்டு வந்த, பையைப் பாறைக்குப் பக்கத்திலேயே மறந்து வைத்து விட்டுப் போய்க்கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/12&oldid=1304906" இலிருந்து மீள்விக்கப்பட்டது