பக்கம்:வழிப்போக்கன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


களே, சர்மாவுக்கு என்ன வாங்கிப் போவது?"என்று ஒரு கணம் வாசலிலேயே நின்று யோசித்தான்.

ஆஸ்பத்திரி வாசலிலேயே பழக் கூடைக்காரர்கள் கடை போட்டிருந்தார்கள். இன்னெரு பக்கத்தில் காலி சீசாக்களும் அவுன்ஸ் பாட்டில்களும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு டஜன் சாத்துக்குடிப்பழங்களை வாங்சிப் பைக்குள் போட்டுக் கொண்டான் சுந்தரம்.

இரண்டு நாட்களாகவே சர்மாவின் ஜூரம் நார்மலுக்கு வந்திருந்தது. தலைப்பக்கம், கட்டிலுக்குமேல், சுவரில் மாட்டப்பட்டிருந்த டெம்பரேச்சர் ஷிட்"டில் ஜூரக்கோடு புள்ளிக்குப் புள்ளி மலைத்தொடர்போல் ஏறியும் இறங்கியும் காணப்பட்டது. அப்போதுதான் அந்தக் கோடு நேராகப் போகத் தொடங்கியிருந்தது.

சர்மா கண் திறந்து பார்த்தார்.

சுந்தர்!......

அவனைக் கண்டதும் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்து விட்டது அவருக்கு.

"சுந்தரம்!” அவர் தம் கைகளைத் தூக்கி அவனே ஆவலோடு அணைத்துக்கொள்ள முயன்றார், முடியவில்லை. அநாதைபோல் ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்த சர்மாவைக் கண்டதும் சுந்தருக்கு துக்கம் நெஞ்சை வெடித்துக்கொண்டு வந்தது. அவன் கேவிக் கேவி அழுதுவிட்டான்.

"நீ அழாதே சுந்தரம்! ஜெயிலில் உன்னை அடித்துவிட்டார்களாமே? எப்படித்தான் அந்தக் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டாயோ?...சகுந்தலா எனக்கு எல்லாம் சொல்விவிட்டாள். உன்னைக் காட்பாடிஸ்டேஷனில் பார்த்தாளாமே..." அவருக்குப் பேச முடியாமல் மூச்சுத் திணறியது.

"நீங்கள் பேச வேண்டாம். உங்கள் உடம்பில் சக்தி இல்லை" நாக்கு வறண்டு போயிருக்கிறது. சாத்துக்குடி ரசம் பிழிந்து தருகிறேன், சாப்பிடுங்கள்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/121&oldid=1313649" இலிருந்து மீள்விக்கப்பட்டது