பக்கம்:வழிப்போக்கன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சுந்தர் திரும்பி வந்தான்.

"தலைமை டாக்டரைப் பார்த்தேன். காமுவை ஸ்பெஷல் வார்டில் வைத்து கவனிப்பதாகச் சொல்கிறார். எப்படியும் ஒரு மாதத்தில் குணமாக்கி விடுவதாகக் கூறுகிறார்" என்றான் சுந்தர்.

அந்த வார்த்தைகளைக் கேட்டபோது சகுந்தலா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.

"எவ்வளவு பணம் செலவழிந்த போதிலும் கவலையில்லை. நான் ஐந்நூறு ரூபாய் எடுத்து வைத்திருக்கிறேன், இன்னும் தேவையான பணத்தை ஊருக்குப் போய் அனுப்புகிறேன் காமுவை இன்றே ஸ்பெஷல் வார்டில் சேர்த்துவிடச் சொல்லுங்கள்என்றாள் சகுந்தலா.

சகுந்தலா , காமுவின்மீது கொண்டுள்ள அன்பைக் கண்ட சுந்தரின் நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டது.

அன்றே சகுந்தலா வேலூருக்குப் புறப்பட்டு விட்டாள். "நான் போய் தாத்தாவைக் கவனித்துக் கொள்கிறேன். அவர் தனியாக ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார் நீங்கள் இங்கேயே இருந்து காமுவைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது எனக்குக் கடிதம் போட்டுக் கொண்டிருங்கள். பணம் தேவையானால் எனக்கு எழுதுவதற்குச் சங்கோசப்பட வேண்டாம் " என்று கூறிப் புறப்பட்டாள் சகுந்தலா.

எவ்வாறோ இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருந்த சர்மா முற்றிலும் குணம் அடைந்து ஆற்காட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார். அவர் பிழைத்தது புனர் ஜன்மம் என்றே கூறவேண்டும். மாங்குடியில் இருந்த கங்காதரய்யரும் குடும்பத்துடன் ஆற்காட்டுக்கே வந்து சர்மாவுடன் தங்கியிருந்தார். சர்மா அவரை ஊருக்குப் போகவிடவில்லை. மேலும் சில நாட்களுக்குத் தம்முடனேயே இருக்க வேண்டுமென சர்மா அவரைக் கட்டாயப்படுத்தி வைத்திருந்தார்; அவரால் சர்மாவின் பேச்சைத் தட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/126&oldid=1313659" இலிருந்து மீள்விக்கப்பட்டது