பக்கம்:வழிப்போக்கன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


"ஏன் அழவேண்டும்? உனக்குப் பிடித்த கணவளைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பிறகு, என் வரவை எதற்காக நீ எதிர்பார்க்கிறாய்?"

"சுந்தர், என்னை வாள் கொண்டு அறுக்காதே! தாத்தாவாகப் பார்த்து முடிவு செய்த பிறகு, நான் என்ன செய்ய முடியும்?"

"உன் தாத்தாவுக்கு என்மீது என்ன வெறுப்பு? அவருக்கு நான் என்ன துரோகம் செய்துவிட்டேன்?"

'உன் ஜாதகம் சரியில்லையாம்; உனக்கு ஆயுள் பலம் இல்லையாம். ஆனால், அதை வெளியே சொல்ல இஷ்டப்படவில்லை அவர். என் அப்பாவுக்குக்கூட இந்தத் திருமணத்தில் கொஞ்சமும் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். தாத்தாதான் ஒரே பிடிவாதமாக இருந்துவிட்டார். அவரை மீறி அப்பாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை சுந்தர், காப்பி சாப்பிட்டாயா?" .

'எனக்கு ஒன்றும் வேண்டாம்!"

"உன் கையிலே என்ன அது?"

"உனக்குக் கலியாணப் பரிசு கொண்டு வந்திருக்கிறேன்!"

"எங்கே?"

சகுந்தலா ஆவலுடன் அதை வாங்கிப் பார்த்தாள். "நீ வரைந்த படமா அது? எவ்வளவு அழகாயிருக்கிறது! இயற்கைக் காட்சியா?" என்றாள் அவள் மகிழ்ச்சியுடன்.

'இல்லை; செயற்கைக் காட்சி!' என்றான் சுந்தர் வெறுப்புடன்.

அந்தப்படத்தில் மூன்று மரங்கள் இருந்தன.

ஒன்று அரசமரம், மற்றொன்று வேப்பமரம். இன்னென்று கலியாண முருங்கை மரம்.

அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்கும் இடையே ஒரு வேலி இடையிலிருந்த வேம்பு புதிதாக முளைத்த கலியாண முருங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/61&oldid=1321009" இலிருந்து மீள்விக்கப்பட்டது