பக்கம்:வழிப்போக்கன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

“வேணாம்; நீங்க சாப்பிடுங்க!...” என்று கூறிவிட்டு கண்களை மூடியபடியே பழைய நினைவுகளில் லயித்துவிட்டான் சுந்தரம். அவன் மனக்கண்முன் பழைய நிகழ்ச்சிகள் நிழ லாடின.

10

மூன்று ஆண்டுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகள்-சுந்தரம் தமிழ் போதினி காரியாலயத்திலிருந்து தன்னுடைய அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, வாலாஜா ரோடிலிருந்த ‘வள்ளுவர் வாசக சாலை’ என்ற புதிய போர்டு அவன் கண்ணில்பட்டது.

உள்ளே சென்று பார்த்தான். சிறிய வாசகசாலேதான்; ஆயினும் பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருந்தது. ஒரு மூலையில் மலேயா சோமசுந்தரம் உட்கார்ந்திருந்தான்.

சுந்தரம் அவனே முதன் முதலாகக் கண்டது அங்கே தான்.

“வாங்க, என்ன வேணும்?” என்று கேட்டான் மலேயா சோமு கணிவரென்ற குரலில்.

“ஒன்றுமில்லை; வாசகசாலைன்னு போர்டு போட்டிருக்கவே பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். நீங்கதான் ஆரம்பிச் சிருக்கீங்களா?”

“ஆமாம்; தமிள் மொளியிலே எனக்கு ஒரு ஆர்வம். இத்தனை வருசமா நான் மலையாவிலே இருந்தேன், அங்கே எங்கப்பாருக்கு பெரிய எஸ்டேட் இருக்குது. எனக்கு அங்கே பொளுது போகல்லே. சொந்தமா ஏதாவது ஒரு தொளில் செய்யணும்னு ஆசைப்பட்டு மெட்ராசுக்கு வந்து இந்த வாசக சாலையை ஆரம்பிச்சிருக்கேன்...நீங்க யாரோ?”

“நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்: பத்திரிகைகளுக்கெல்லாம் படம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/76&oldid=1322771" இலிருந்து மீள்விக்கப்பட்டது