பக்கம்:வழிப்போக்கன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

ஞாண் போட்டுக்கொள்ளக் கொடுத்து வைக்காத அந்தக் குழந்தையின் பணம் அதன் அந்திமக் காரியத்துக்குப் பயன்பட்டது. அந்தப் பணம் இப்படித்தான் உபயோகப்பட வேண்டும் போலிருக்கிறது. அந்த விநாயகர்தான் இப்படி உங்கள் மூலம் கொடுத்தனுப்பி இருக்கிரறார்" என்று கூறிக் குலுங்கினான் சுந்தரம்.

11

ந்தியாவின் கிழக்குவாசலை யுத்த அபாயம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. குண்டு வீச்சுக்கு அஞ்சிச் சென்னைநகர் மக்களில் பெரும் பகுதியினர் தங்கள் குடும்பத்துடன் சொந்தக் கிராமங்களுக்கும் சுற்றுப்புற பகுதிகளுக்கும் குடியேறிக் கொண்டிருந்தனர். அவர்களில் சுந்தரமும் ஒருவன். தான் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்துவிட்டுத் தன்னுடைய மனைவியையும், மகள் சாரதாவையும் பழையபடியே கிராமத்தில் கொண்டு விட்டுவிட முடிவு செய்தான் அவன். ஆனால், ஜப்பான்காரனுடைய குண்டுக்குப் பயந்து அல்ல; வாழ வசதியில்லாமல் வாழ்க்கைச் சக்கரம் சுழல மறுத்து விட்டதால்!

“ஏன்? குண்டுக்குப் பயந்து கொண்டா? என் தலை மீதே குண்டு விழுந்தாலும் பரவாயில்லை. நான் பட்டணத்தைவிட்டு அசையப் போவதில்லை...” என்றாள், காமு.

“காமு! உன்னை ஊரில் கொண்டுபோய் விடுவதற்கு எனக்கும் இஷ்டமில்லைதான்; ஆனால் சந்தர்ப்பம் இப்படி நமக்கு எதிராகச் சதி செய்கிறதே? வீட்டைக் காலி செய்வதைத் தவிர வேறு வழியே இல்லையே!”

“என்னை ஊரில் கொண்டு தள்ளிவிட்டு நீங்கள் மட்டும் இங்கே இருக்கப் போகிறீர்களா? அது முடியாது. யுத்த பயம் உங்களுக்கு மட்டும் இல்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/87&oldid=1322806" இலிருந்து மீள்விக்கப்பட்டது