பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 露7 வினு : 11 எதற்கும் தொடக்கம் இருக்கும்! நினைவில் முதன்முதல் தாங்கள் முயன்றியங்கு எழுதிய பாடல் வரியைப் படிக்க இனிக்குமே! ஆடகம் ஒத்திடும் ஆக்கவி கூறுக! விடை : என்றன் முதற்பா 'தமிழன்’ எனுமிதழ் ஒன்றில் அனுப்ப உடன்வந் ததுவே! அதன் ஆசிரியர்என் பாடலை ஆய்ந்தே புதுமை புதுமையே பாரதிப் பாடலே என்றென ஊக்கி எழுதப் புகழ்ந்தனர்! அன்றுதான் பாடிய பர்ட்லோ "பாரதிதாள் இன்றடா பாட்டிசைத் துப் பாடடா" என்பதாகும்! குன்றின் எழுத்தாய்க் குடிகொண்ட தென்னுள்ளே! விணு : 1.2 தொட்டில் மொழியும் துணையாய்ப் பிரெஞ்சுடன் பட்டம் பெறவே படித்ததாய்க் கேள்வி - அறிந்த மொழியில் அயல்மொழிப் பாக்கள் அறிஞரும் ஏற்றிட ஆக்கிய துண்டாநீர்? விடை : - . . . . . . . . - - தாய்மொழி யோடு பிரஞ்சுமே தக்கோரின் வாய்வழிக் கேட்டுநான் மாசறக் கற்றேன்! அயல்மொழிப் பாக்கள் அறிவேன்தான்; பாக்கள் செயல்முறை கானேன்; பின்செய்ததும் இல்லையே! விளு: 13 - பண்டை இலக்கியப் பாக்களில் தாங்களே கண்ணெளக் கொண்ட கருத்து வரியெது: