பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 89 கணக்காயர் எவரெவரோ பெற்றெடுத்த பிள்ளையெலாம் தன்பிள்ளை என்றே எண்ணி சுவரிடையில் மரநிழலில் துயருற்ற வாழ்க்கையிலும் தோய்ந்த அன்பால் அவரவர்க்கே ஏற்ருற்போல் - அறிவூட்டி நெறிகாட்டி ஆன்ற மக்கள் கவர்கல்வி அளிக்கின்ருர் கணக்காயர் பெருவள்ளல் கவலை யற்றே! குளம்பூத்த தாமரை போல் குதித்தாடும் பிள்ளைகளின் - குறும்பைப் போக்கி உளம்பூத்த இருளகற்றி . ஒழுக்கத்தை நல்லறிவை ஊட்டி யூட்டி களம்பூத்த அறுவடையைக் காண்கின்ற உழவன் போல் காலம் தோறும் . வளம் பூத்த குடிமக்கள் கணக்காயர் வழங்குகின்ருர் வாழ்க நீடே!