பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை எனது தந்தையும் மறைந்த கவிஞருமான கவிஞரேறு வாணிதாசன் அவர்களைத் தமிழும் தமிழுலகமும் நன் கறியும் அவர் மறைந்த பிறகு வருகின்ற முதல் நூல் வாணி தாசன் கவிதைகள் தொகுதி-2” எனும் இந்நூலாகும். இதற்குமுன் கவிஞரது படைப்புக்களாக வெளிவந் துள்ள நூல்கள் தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம்: வாணிதாசன் கவிதைகள் தொகுதி-1, பாட்டரங்கப் பாடல் கள் முதலாய பதினைந்து நூல்களாகும். இந்நூல்களுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்து வரவேற்ற தமிழுலகிற்கும் தமிழன்பர்கட்கும் எனது மனமார்ந்த நன்றி. இதே போன்று இப்போது வெளிவருகின்ற இக்கவிதை நூலுக்கும் ஊக்கமும் ஆதரவும் கொடுத்து வரவேற்பார்கள் என நம்பு கின்றேன், கிடைத்தவரை கவிதைகள் எழுதப்பட்ட தேதி யினை அங்வக் கவிதைகளின் கீழே கொடுத்துள்ளேன். வெண்கழுகுப் பேடை எனும் கவிதையின் கருவையே அட்டைப் படத்தின் ஒவியமாக்கியுள்ளேன். இந்நூலுக்கு அணிந்துரை தந்துதவிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் டாக்டர் நன்னன் அவர்கட்கும், இந் நூலைப்பதிப்பிக்க எனக்கு ஊக்கமும் துணிவும் ஊட்டிய எனது ஆய்விற்கு வழிகாட்டியான டாக்டர் பொற்கோ அவர்கட்கும், மற்றும் படிகளைப் பரிசோதிப்பதற்குதவிய புலவர் திரு. நீ அறிவழகன், திரு சுதர்சன் எம். ஏ., திரு நாராயணசாமி' பி. ஏ. ஆகியவர்கட்கும் இந்நூலை அச் சிட்டுத்தந்த நாவல் அச்சகத்தார்க்கும் அட்டைப் படத் திற்கு ஒவியம் வரைந்துதந்த ஒவியர் திரு. தென்னன் பி.எல். அவர்கட்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.