பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வாணிதாசன் புதிய உலகம் புதிய உலகம் செய்வாய்! தமிழா! புதுமை வெறியூட் டெழுந்திரு! தயக்கமேன்? விதிவிதி என்பது வீணர்சொல்! தள்ளு! வீரமும் மானமும் உயிரெனக் கொள்ளு! 1 மண்வாழ் உயிரினுள் தாழ்வுயர் வேது? வகுத்தபல் சாதி ஒருசிலர் சூது! பெண்ணினம் தாய்மையாம் பழிக்காதே போற்று! பெற்றதாய் நாடுன்றன் சொத்தெனச் சாற்று! 2 ஆற்றுப் பெருக்கெதிர்த் தேறிடு மீன்போல் எதிர்த்தழி மூடப் பழக்கத்தை வாழ்வில்! மாற்றிடு உலகினை மக்களின் அரசராய்! மழைதரு செல்வம் உயிர்க்கெலாம் பொதுவாய்! 3 பிச்சை எடுப்பவர் இந்நாட்டி வில்லை! பேச்சைத் தடுப்பவர் எவருமே இல்லை! இச்சைப் படும்பொருள் இளங்கதிர்த் தென்றல்! இனிய குயிலிசை மேற்றிசைச் செவ்வான்! 4 தமிழ்மது வெறியினில் ஆடுவார் மக்கள்! கட்டாயத் தொழிற்கல்வி நாடுவார்1 சந்தம் கமழ்மனச் சோலையும் வாவியும் இன்பக் காட்சிப் பொருளென்று தேடுவார்! 5 உச்சி இடிந்து பொசுக்கினும், மேரு உலகம் வெடித்து விழுங்கினும் இனி அச்ச மில்லை புதுநாட் டினிலே! அடிமைச் சுமை இல்லை வாழ்வினிலே! 6