பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் t? வயலெல்லாம் நெற்கதிர்கள் பாலேறிச் சாய்ந்து வாராத தலைபோல மடிந்து பின்னிக் கிடக்கும் துயரெல்லாம் மாய்ந்ததென எண்ணமிட்டாய் அந்தோ! தொந்தியப்பர்க் கதுசொந்தம்; உனக்கென்ன உரிமை? புயல்போலப் பெரும்புரட்சி செயவேண்டும் நாட்டில் புதுவாழ்வை நீயடைய உன் நாட்டை ஆளத் தயங்காதே! திராவிடனே! விரைந்தெழுவாய் இன்னே! தைபிறக்க வழிபிறக்கும்! செயத்தக்க செய்யே! 4