பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னதாகி Y- 33 கன்றுகள் தாய்மடி நினைத்தக எழுந்தே! காதுகள் உதறின குளிருடல் தெளிந்தே: கன்றினட முழங்கின வைகறை முரசம் : மங்கையர் நீர்க்குடம் ஏந்தியே நடந்தார்: இன்றுள பசிப்பிணி வறுமையைக் களைய எழுந்தது விண்ணிடை உதயசூரியனும்: ஒன்றிய பள்ளியில் இன்னுமா உறக்கம்? ஒண்டொடியே! பள்ளி எழுந்தரு ளாயே! 4 அண்டையில் ஆய்மகள் தயிரினக் கடைந்தாள்: அவ்வொலி செவிப்புகா தின்னுமா உறக்கம்: வன்டலை இடும்.ஊர் ஆற்றிடைப் பெண்கள் மலர்விழி சிவந்திட மூழ்கியே வந்தார்! கொண்டலைக் கிழித்துமே கொடுமழை விலக்கிக் குரைகடல் உதயசூரியன் எழுந் ததுவே! கெண்டைகள் வெட்கிடு செவ்வரி விழியாய்! கிளிமொழியே! பள்ளி எழுந்தரு ளாயே! 5 காக்கைகள் கரைந்தன! கரைந்ததே இருளும்! கடிமலர்க் காவினில் கூவின குயில்கள்! மேக்கினில் இருளும் மறைந்தது விரைந்தே: விரிமலர் வண்டும் இசைத்தன கேளாய்! சேக்கையில் வைகறை இன்னுமா உறக்கம்? செங்கதிர் உதயசூரியன் வரக் காண வாக்கினை அருளி மலரொடு வழுத்த மறமகளே! பள்ளி எழுந்தரு வாயே! § 1–12–-66