பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையறு நிலை கண்ணிர் சிந்துக! கண்களே! கண் ணிர் சிந்துக கண்களே! கன்னிர் சிந்துக கண்களே! அண்ணல் பாரதிதாசன் இறந்தார் அந்தோ! அந்தோ! அந்தோ! மறைந்தார்! மண்ணில் மறைந்தார்! மனத்தில் நிறைந்தார்! மக்கள் கவிஞர் இறந்தார்! பிரிந்தார்! புண்ணில் பாய்ந்த புதுவேல் நமக்கே! புகலிடம் இல்லே புத்துல கிற்கே! காலேக் கதிரவன் என்றும் இருக்கும்! கடிமணப் பூக்கள் என்றும் சிரிக்கும்! மாலைச் செக்கர் என்றும் மயக்கும்! மலைவீழ் அருவி என்றும் முழக்கும்! வட்ட நிலவு வளரும் தேயும்! வரிக்குயில் என்றும் பாடும்; ஒயும்! குட்டைத் தாமரை மலரும்; காயும்! குளிர்மரத் தோப்பு தளிரும்; காயும்! கார்முகில் தவழாக் குறிஞ்சியு முன்டோ? கருவண் டிசைக்கா முல்லையு முண்டோ? வார்புனல் அலேக்கா மருதமு முண்டோ? மறிகடல் முழக்கா நெய்தலு முண்டோ? அழகின் சிரிப்போ அழியா ஒவியம்! ஆசான் பிரிவென் அழுகைக் காவியம்! பழகு தமிழுக் கினியார் பிறப்பார்? பைந்தமிழ் வளத்தை இனியார் நிறைப்பார்? 23–4–64