பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வாணிதாசன் தாளுெத்துக் கணவருடன் மனை நடத்து கின்ற தனிராசி, மகராசி என்கின்ற வான மீளுெத்த எண்ணரிய நற்குணங்கள் கொண்ட வீட்டரசி பவுளும்பாள் புகழ் வாழ்க நீடே! 7 இளமையிலே இல்லறத்தில் இணைந்திருக்கும் ஆளன் ஏதேதோ கற்பனையில் சிறகடித்தல் உண்டாம்! வளமையிலே வாழ்வாங்கு வாழ்ந்திருக்க வேண்டி வற்ருத பொருள்தேடச் செயல்படுதல் உண்டாம்! உளமொத்த இல்லாளின் தூண்டுதலி ளுலே ஒளிசிறக்கும் விளக்கைப்போல் மனேசிறக்கக் கூடும்! தளைசீரும் அடிதொடையும் யாப்பணி யும் கூட்டித் தமிழ்ப்பெண்ணுள் பவுளும்பாள் புகழ் பாடு வோமே! 8 பிறந்தகத்துக் கொளிசேர்ப்பார் ஒன்றிரண்டு பெண்கள்! பெற்ருேரைச் சுற்றத்தைத் தோழியரை வீட்டை மறந்துவந்து மணமேற்றுத் தனக்கொண்ட ஆளன் வாழ்விற்கே ஒளிசேர்ப்பார் ஒன்றிரண்டு பெண்கள்! அறந்தவரு மனத்தோடே மனை மாட்சி காட்டி அவ்விரண்டு வீட்டிற்கும் ஒளிசேர்த்தார் இங்கே மறைந்தவராம் பவுளும்பாள்; மாசில்லா வீணே ! வாழ்ந்தமுறை எண்ணியெண்ணி மனமாறு வோமே! 9 விண்மீது பொன்னரிவாள் போல்பிறந்த திங்கள் விரிவானில் மறைந்தொருநாள் பிறப்பதுவும் உண்டாம்! மண்மீது பிறக்கின்ற உயிரினங்கள் எல்லாம் மறைந்தொருநாள் பிறப்பதுதான் மண்ணுலக வாழ்க்கை: கண்மீது வாழ்கின்ற இமைபோல இல்லம் காத்திருந்த பவுளும்பாள் நமைவிட்டுச் சென்ருர்! புண்மீது தீக்கொண்ட நெஞ்சுடையீர்! தீர்ந்து போனசெயல் எண்ணுமல் மனம்மாறு வீரே! 10