பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணம் வெண்கழுகுப்பேடை கழைஉதிர்த்த நெல்அருந்திக் கானமயில் கூவும்! காட்டெருமை கன்றருகில் அசைபோடும்; நீண்ட கழைவதிர்த்த மரக்கிளையில் பேடைச்செம் போத்து தனித்திருக்கும் சேவலிடம் தாவிப்போய்க் குந்தும்! மழைஉதிர்த்த கற்பாறைப் பள்ளத்து நீரை மானினங்கள் கால்மடித்து வாலாட்டி உண்ணும்! இழை உதிர்த்த மணியொத்த கொன்றைமலர்ச் சாரல் இடுக்கினிலே அடைகாக்கும் வெண்கழுகுப் பேடை! கருங்கண்கள், வெள்ளிறகு, பிளந்தவாய் மூக்கு, கன்னியர்கள் குளிக்கின்ற நிறமஞ்சள் நெற்றி பெருங்கால்கள், உளியொத்த சிறியவிரல், காட்டுப் பேரீந்தின் முள்போன்ற நகக்கூர்மை எல்லாம் ஒருங்கமைந்த வெண்கழுகுப் பேடையோ நித்தம் ஊன் உணவு குஞ்சுக்குத் தேடிவந்தே ஊட்டும்! அருங்குடும்பத் தாய்மாரின் பண்பெல்லாம் இந்த அடக்காட்டு மலைக்கழுகுக் கார் உணர்த்தி வைத்தார்: கண் பறிக்கும் இடிமின்னல் காற்ருேடு சேர்ந்தே களிருெத்த கார்முகில்கள் பேரிரைச்சல் போடும்! விண்பறித்து எழுந்ததென மேல்வானில் மோதும்! வெளியெல்லாம் சுழல்காற்று! விலங்கினங்கள் ஒடும்! மண் பறிக்க வந்ததென மழைவானில் கொட்டி வாட்டிற்றே! உயிர்இனங்கள் பசியால்வா டிற்றே! எண்ணியெண்ணி ஏங்கிற்றே வெண்கழுகுப் பேடை இரையின்றி வாய்திறக்கும் குஞ்சுகளைக் கண்டே!