பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கண்ட கவிஞர்! அன்னையை இழந்தேன் எட்டாம் ஆண்டினில்: அழுதேன் இல்லை! என்னைக்கொண் டவரி டத்தில் எழுத்தோத விட்டார் என்னைl அந்நாளில் கண்டேன்! வாழ்வில் அவரே என் ஆசான்! தந்தை! என்னைர்ே பொறுப்பீர்! நானோ இருமுறை அழவேண் டும்மே! பாரினைத் திருத்தும் ஆசான்! பழமையைத் திருத்தும் ஆசான்! சீர்தளை திருத்தி கல்ல செந்தமிழ் திருத்தும் ஆசான்! ஊர்கண்ட ஆசான்! என்றன் உளங்கண்ட ஆசான்! இன்றோ வேரற்றுச் சாய்ந்தார்! நெஞ்சில் வேல்பாய்ந்து வேகின் றேனே! மன்னர்மன் னனையும் மூன்று - மணிப்பெண்ணும் அறிவார் சில்லோர்! மன்னர்மன் னனைப்போல் ஆசான்! மனத்தினில் பயின்ற நாங்கள் தென்மொழி மான வர்கள் சிறப்பிடம் பெற்றே வாழ்ந்தோம்! என்சொல்வேன்! தமிழ் இழந்தேன்! இருவிழி இழந்தேன் இன்றே