பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெ. முத்துக்கணேசன் 91 அருவிசேர் கண்சோர அழகு நீங்க அடை காத்த கற்பெல்லாம் பருந்து கொள்ளப் பொருளிழந்து வாடுதலாம் பொழுத றிந்தால் பொய்க்காமப் புலனறிந்த பெண்கள் கோடி! இதில் காமப் பித்தர்களைத் தம் வலையில் வீழச் செய்து சில காலம் சொகுசுடன் வாழ்ந்து கற்பை இழந்து அனாதைகளாய்த்தெருவில் நிற்கும் பெண்களை இரக்கத்துடன் நோக்குகின்றார். ஆணோடு பெண்ணினத்தைச் சேர்த்து வைக்க அம்மலரோன் வரவிடுத்த துதோ காமம் நாணகற்றிக் கூடுதற்குக் காம வேள்தான் நாணேற்றித் தொடுத்துவிட்ட மலரோ காமம் காணுகின்ற பொருளில்ெலாம் விதிவ குத்த கண்கட்டி வித்தையதோ காமம், இன்பம் பேணுகின்ற பொழுதினிலே பெயர்ந்து விட்டால் பெரும்பொய்யாய் மாறிடுமே காமக் கோலம் என்ற பாடல் நெறி கோனின் நேரும் நினயைக் காட்டும் எச்சரிக்கையாய் அமைகின்றது. இவ்விடத்தில் காதல் உணர்வு பற்றிய அறிவியல் கருத்தை விளக்குதல் பொருத்தமாகும் எனக் கருதுகின்றேன். மானிட உடல் உயிரணுக்களால் (cells) ஆனது. ஓரணுவைச் சோதித்துப் பார்த்தால் அதில் 23 இணைநிறக் கோல்கள் (chromsomes) அமைந்திருப்பதைக் காணலாம். ஒவ்வொரு நிறக் கோலிலும் ஆயிரக் கணக்கான ஜீன்கள் (Genes) உள்ளன. ஆனால் ஆணின் விந்தணுவில் ஒற்றை நிறக் கோலும், பெண்ணின் முட்டையணுவில் ஒற்றை நிறக் கோலும் உள்ளன என்பது அறிவியல் உண்மை. ஒர் விந்தணுவில் எக்ஸ்(X) நிறக்கோல்களும், வொய்(Y) நிறக்கோல்களும் கலந்தே காணப் பெறும் பெண் முட்டையணுவில்Xநிறக் கோல்களும் மட்டிலுமே காணப் பெறும். விந்தணுவும், முட்டையணுவும் பிள்ளைப் பருவத்தில் சிதம்பர ரகசியமாய் இருக்கும். பெண் பூப்பெய்தும் காலத்திலும், ஆணின் முன் குமரப் பருவத்திலும் இவை முதிர்ச்சியடைந்து செயற்படுவதற்குத் தயார் நிலையில் இருக்கும். இருபாலரிடமும் காணப் பெறும் ஒற்றையணுக்கள் இணைந்து இரட்டையணுக்களாக மாறினால்தான் மனித உடல் உண்டாகும்.