பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to: வாழும் கவிஞர்கள் ஆடை குலைந்ததோர் அழகியின் ஒவியத்தை மேடையிலே ஏற்றி மேற்செல்வார் கண்களினைத் தொட்டிழுக்க வைத்திருப்பர் தோன்றும் திரைப்படத்தைக் கட்புலனாற் காணக்கமலா திரையரங்கம் எழுவின் இளைஞர்களே என்ற குறிப்பினையும் பழுகின்றி ஆங்கே பதித்திருப்பர் அவ்வழியே ஈருருளிவண்டியிலே எதிரெதிரே வருபவர்கள் பார்வை கவருமத்த ஒவியத்தைப் பார்த்தபடி மூட்டி விழுவார்கள் முகத்திற் சினமிலராய்த் தட்டுவார் துளசியினை, தையலின் ஒவியத்தை கடைக்கண்ணால் மீண்டும் பார்த்துச் சுவைத்துக் கடையிதழில் சிறியதகை கட்டவிழ வண்டியைத் தள்ளி நடப்பார்கள் இதனைக் கவிஞர் 'தள்ளரிய காட்சி என்கின்றார். இதில் எள்ளற் குறிப்பினை உணரலாம். அடுத்துக் காண்பது குழாயடிச் சண்டை இதைப் பட்டிமன்றம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றார் கவிஞர். தலைவர் தண்ணீர்க் குழாய் பங்கேற்றுப் பேசுபவர்கள் முழுமதி மடவார்கள். இதோ அந்தப் பட்டின்றம், தடுவர் தலைமையிலே நல்லதோர் பட்டிமன்றம் மூடுகி தடக்கும் முழுமதி மடவார்கள் அணிஅணியாப் பிரித்து அருமைத் தமிழில் மணிமணியாக வார்த்தைச் சரந்தொடுப்பார் அகர முதலியினும் காண்டற் கரிதான தகைமொழிகள் பன்னுறு தடமாடும் அந்த இடத்தான் குழாயடியாம், இடையில் குழாயென்னும் தடுவர் நிலைமைக்கு தானித் தலைகவிழ்ந்து செனட்டுக் கண்ணிரை விட்டுக் கலங்கிநிற்பார் இந்தத் தீர்த்தத் துறையில் இரண்டு நிகழ்ச்சிகளைச் சுட்டுகின்றார். (1) இங்குச் சிவந்த மேனித் தெரிவையரும் மாநிற மேனி ஆடவரும் ஆடுகளும் மாடுகளும் அணுவளவும் பேதமின்றித் தீர்த்தமாடும். இதனைக் காந்தியடிகள் கண்ட கனவு பலிப்பதற்குக் கால்கோள் இது என்று மனத்தில் இருத்துமாறு நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றார். 2. இந்தத் தீர்த்தத் துறையில் எல்லா விலங்குகளும் ஏதும் பகையின்றிக் கொல்லாமை போற்றிக் குளிர்நீர் அருந்தும் காட்சி. இது காந்தியார் கண்ட இராமராச்சியக் கனவாகக் கருதுமாறு தெரிவிப்பதாகும்.