உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62 வாழும் கவிஞர்கள் சாராயக் கடைகள் நடத்தத் தடைகூட உள்ளது. மது விற்கும் கடைக்கு உரிமம் வழங்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும் எது வேண்டுமானாலும் இருளில் அது கிடைக்கும். இது பற்றிக் கவிஞர் .ళడి. சட்டம் இருக்கிறது சாராயம் கிடைக்கிறது. தட்டினால் தருகின்ற தருமம் நடக்கிறது காந்திபேர் வாழவைத்துக் காந்தியத்தைக்கொன்றுவிட்டார் காத்தி செயந்திதனைக் கொண்டாடிக் களிக்கின்றார் ஏத்திய கொள்கைகளை எங்கோ புதைத்துவிட்டார் என்ற அடிகள் நாட்டின் அவலத்தைப் பிட்டுப் பிட்டு வைக்கின்றது. கோட்சே கொன்றது அடிகளின் உடம்பையே. கதர்வேட்டி காந்திகுல்லா அணிந்து கொண்டு அடிகளின் உயிரையே சிதைத்து விட்டார்கள் சிலர் பளியும் பறம்பும், தமிழ்க்கடல் இராய.சொ.வள்ளல் அழகப்பர். 'மறையா மலையா? மறைமலையா என்ற பாடல்கள் சங்கப் பாடல்களைப் போன்ற கையறுநிலைப் பாடல்கள் கல்நெஞ்சத்தையும் கரைக்க வல்லவை. வாட்டுகின்ற பசிப்பிணியால் வருந்திவரு வோர்க்கெல்லாம் அன்ன வாசல் மீட்டுகின்ற யாழெடுத்து மிகுபுலமைத் திறலுடைய கவிக்கு யில்கள் வேட்டெழுத்து வந்திடுமேல் விரும்பிவர வேற்கின்ற வேடந் தாங்கல் காட்டகத்து வெண்முல்லைக் கவிஞனுக்கும் சிறப்புகளை வழங்கும் தேரூர். என்பது பறம்பு நாட்டின் அறிமுகம் திறமைக்குப் பரிசுதரல் பாரிவள்ளல் குறியன்று தீயாய்ப் பற்றும் வறுமைக்குப் பொருள்தரலே வாழ்க்கைநெறி எனக்கொண்டான் கபிலர் பாட்டில் பெருமையிலா எருக்கினையும் இறைபேணத் தவறுகிலான் என்ற பேச்சில் பொருளென்ன? கடைக்கோடி மனிதனையும் இவன்புரத்தல் கழறத் தானே ! இது பாரி வள்ளலை நமக்குக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம்.