உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o வாழும் கவிஞர்கள் 'முருக வருவாய் என்ற தலைப்பில் பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம் 1. சாள்றோர்கள்: சுந்தரரின் திருத்தொண்டத் தொகையைக் கலங்கரை விளக்கமாகக் கொண்டு பாரதி, தேசத் தொண்டர்களையும் பாரதிதாசன் திராவிடத் தொண்டர்களையும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. பலவேறு தொண்டர்களையும் பாடியுள்ளதைப் போல் கவிஞர் சவகர்லாலும் ஒரு சிலரைப் பாடியுள்ளார். அவர்களைக் காண்போம். வள்ளுவர் இரண்டு பாடல்களில் இது ஒன்று. சமயக் குதர்க்கந் தனைக்கடந்தாய் சாதி இனத்தின் திறங்கடந்தாய் சகல அரசும் நாட்டெல்லை தனையும் கடந்தாய் விண்ணிடிக்கும் இதயத் தளவில் உயர்த்திட்டாய் இருளைப் போக்கி ஒளியூட்டும் இருட்சுடர் எனதி ஒளிர்ந்திட்டாய் எண்ணப் பொழிலில் மலர்ந்திட்டாய் தமதெனத் தமிழர் தோள்கொட்ட நாவிற் குறளின் தேன்சொட்ட நாளும் விழவும் கொண்டிட்டாய் தமது தெய்வம் தனையும்நீ அமைவாய் வென்று விழாக்கொண்டாய் ஆடுக செங்கோ செங்கீரை ஆதி யுலகத் தொருபொருளே ஆடுக செங்கோ செங்கீரை - பிள்ளைத்தமிழ்ப் பாணியில் பாடப்பெற்ற இக்கவிதை அற்புதமாக அமைந்துள்ளது. வள்ளுவர் மேல் பிள்ளைத் தமிழே பாடியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. கம்பன் கம்பனைப் பற்றி ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். எல்லாம் எண்சீர் விருத்தங்கள். அவற்றுள் இரண்டை ஈண்டுத் தருவேன். உள்ளத்தில் உடைப்பெடுத்த இராம காதை ஒட்டத்தில் இணைந்திட்டால் வரும்எல் லாமும் என்று தொடங்குகிறார். சொல்லாலே மண்டபத்தை அமைத்தான், பாட்டுச் சுவையாலே மேடையினைப் போட்டான், சந்தச் சொல்லணங்கை ஆடவிட்டான், அணிகள் என்னும் சுவையணங்கை நடக்கவிட்டான், உணர்வை யெல்லாம்