பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சவகர்ல:ல் 德癌 கன்னமொரு மலரென்டார், பஞ்சின் மென்மைக் காலையொரு மலரென்டார், நாசி கண்டு சின்னதொரு மலரென்பார், ஆண்கள் பெண்ணைச் சிறப்பான மலர்க்குவிய லாக்கித் துய்ப்பார். ஆழ்ந்த தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லாமல் இத்தகைய பாடல் கவிஞரின் படைப்பில் பிறந்திருக்க முடியாது.தேவரின் சிந்தாமணியிலும் கம்பன் காவியத்தில் மட்டிலுந்தான் இத்தகைய பாடல்களைக் கான முடியும், பெண்ணைச் சிறப்பான மலர்க்குவியலாகக் காண்பது கவிஞனின் கண்ணுக்கு மட்டிலும் தான் சிறப்பாக உரியது. தென்றலிலே சதிராடும், வண்டு வந்து தீண்டையிலே குதிபோடும், மான்கள் வந்து நின்றவுடன் தலையாட்டும், மயில்கள் சற்று: நடந்தவுடன் தகைகாட்டும், பெண்கள் கிட்டச் சென்றவுடன் தலைநீட்டும், அவர்கள் தொட்டால் சிலிர்ப்பெய்தித் தரைசேரும், பின்னர் வீடு சென்றவுடன் தொடையாகும், யாப்பில் நின்று தளைபெற்றே சீராகும், கூந்தல் சேகும். மலர்களின் தன்மை தம் அண்டையில் வரும் பிராணிகளுக்கேற்ப மாறிக் காட்டப் பெறுவது அற்புதம் எல்லோருக்கும் ஒருவித சைகையைக் காட்டிவிட்டு தாம் உவமையாகக் கூறப்பெறும் பெண்ணுக்கு மட்டிலும் அடிமைப்பட்டு அவளுடன் ஐக்கியமாவது ஆன்மா பரமான்மாவுடன் கலப்பது போன்ற விசிட்டாத்வைத நிலையைக் காட்டி நிற்பது அற்புதம், தொடை, யாப்பு, தளை, சீர் போன்ற இலக்கணச் சொற்களை மலர்மாலையாக மாறுவதில் அமைத்துக் காட்டுவது கவிஞரின் நுண்மாண் நுழைபுலத்தைப் புலப்படுத்துகின்றது. சில இயற்கை நிகழ்ச்சிகள் : சில இயற்கை நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டுக் காட்டி அவற்றில் உண்மைப் பொருளைப் பொருத்திக் காட்டுவது கவிஞரின் தத்துவ நோக்கைப் புலப்படுத்துகின்றது. 'ஏன்? என்ற தலைப்பில் காணும் பாடலொன்றில் கவிஞர் இவற்றைக் காட்டுவார், நம்மை வியக்க வைப்பார். கீற்றுப் பரங்கிபோல் தோணுவதேன்? - பிறை கன்னியர் நுதலெனக் கானுவதேன்? சோற்றுச் சிதறல்போல் மீன்களிடை - வெள்ளித் தட்டென முழுநிலா ஊர்வதுமேன்?