பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 வாழும் கவிஞர்கள் போய்த்தேங்காய்ச் சூறையிடும் மடமை மாறிப் புதுமலர்ச்சி தோன்றாதா?... இப்படிப் பல்வேறு பட்ட மூடநம்பிக்கை பற்றிமேலும் பேசுகின்றார். நல்லோரின் அறிவுரைக்கே மதிப்பில் லாமல் நடுவிதிக் கழுதையொன்று கத்தும் போதும் பல்லியொன்று பூச்சிகண்டு முனகும் போதும் பசியெடுத்த காக்கையொன்று அலறும் போதும் இல்லாத வியாக்கியானம் பேசிப் பேசி இருக்கின்ற நேரமெல்லாம் வீணடிக்கும் பொல்லாத பஞ்சாங்கப் பழமைப் புத்தி போயொழிந்து மறையாதா? . என்ற கவிதைகளில் கவிஞரின் மூடநம்பிக்கை ஏக்கங்களைக் காணலாம். 6. குறள்நெறியைப் போற்றல் திருக்குறள் உலகப் பொதுறை, எல்லோரும் ஒப்புக் கொள்ளும் முறைகள் அதில் அடங்கியுள்ளன. சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அந்த நெறிமுறைகளை வலியுறுத்துகின்றார். வற்புறுத்துகின்றார் 1. குறள் தரும் குரல் : இந்தத் தலைப்பில் ஆறு பாடல்கள் உள்ளன. அதில் சிலவற்றைத் தருவேன். தனித்தன்மை பெற்ற தாலே தாரணி மொழியோ ரெல்லாம் இனியநூல் வள்ளு வத்திற் கீடுண்டோ என்றே கேட்டார். புனித நூல் என்பதால் இவ்வாறு கேட்டார்கள். தவிர, ஈராயிரம் ஆண்டுகளாக எவ்வித விளம்பரமுமின்றி நிலைத்து நிற்கின்றது என்பதும் ஒரு காரணம். சில நூல்கள் அவை தோன்றிய காலத்திற்கு மட்டிலும் பொருந்தும். திருக்குறளோ எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. வாய்மையின் நன்மை , தீய வறுமையின் கொடுமை, பெற்ற தாயினப் பெருமை, ஈகை தருகின்ற சீர்மை, உற்ற சேயதன் கடமை, கற்கும் செழுங்கல்விக் கேண்மை, பற்றும் நோய்க்கான அருமை கூறும் நுட்பங்கள் ஒன்றி ரண்டா?