பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. டாக்டர்.பு.மு. சாந்த மூர்த்தி இவர் மதுரை மாநகரைத் தாயகமாகக் கொண்டவர். 1959இல் பிறந்தவர். செளராஷ்டிர மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். எனினும் தொடக்கநிலை கல்வி முதல் பயின்று தமிழில் பெரும்புலமை எய்தியவர். கவிதை இயற்றும் திறனை வளர்த்துக் கொண்டவர். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பயின்று தமிழில் எம்.ஏ.பட்டம் பெற்றவர் 1963), நான் திருப்பதியில் பணியாற்றிய போதும் அதன் பின்னரும் 1977-80) தமிழ் மூதறிஞர் குழுவின் தலைவர் என்ற முறையில் என் மேற்பார்வையில் "கம்ப ராமாயணத்தில் உருக்காட்சிகள் படிமங்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். தற்சமயம் மதுரை செளராஷ்டிரக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றி வருபவர். 1977இல் என் மணிவிழா நினைவாக வெளிவந்த மலருக்குக் கவிதையில் வாழ்த்து அனுப்பியதால் இவர் ஒரு கவிஞர்-சிறந்த கவிஞர் என்ற அடையாளம் கண்டேன். கவிதைநூல் ஒன்றும் வெளியிடவில்லை. மலரில் வெளிவந்த கவிதைகளையும், வேறு சில இதழ்களில் வெளிவந்த கவிதைகளையும் நோக்குவோம் : . மணிவிழா மலரில் "சீராளர் பாதை வளர்க" என்ற தலைப்பில் எட்டெழுத்து மந்திர எண்ணிக்கை போல எட்டுக் கவிதைகள் உள்ளன. அவற்றுள் சில, வேங்கடவன் திருவருளால் வினைகள் வென்று வீறுதமிழ் நூலார்ந்த வெற்றிச் செல்வர் ஒங்குபுகழ்த் தமிழாய்வில் உயர்ந்த செம்மல் உள்ளத்தின் நற்பண்பை உணர்த்தும் ஆசான் பாங்கறிந்து செயலாற்றிப் பழகும் நெஞ்சம் பல்லாண்டு வாழ்கவெனப் பாடும் பாட்டில் தாங்குமுளம் தாம்பெற்ற தமிழர் வாழ்க தமிழ்சுப்பு ரெட்டியார்தம் தொண்டு வாழ்க தொண்டுள்ளம் மறவாமல் துலங்கும் பாதை துயமனச் செம்மலெனத் தோன்றும் வாழ்க்கை கண்டுயர்ந்த ஆராய்ச்சிக் களத்தின் வேந்தர் கணிதமிழின் சாறளிக்கும் குறிஞ்சிக் கோமான் பண்பிற்கோர் காட்டாகப் பழகும் பண்பர் பயன்கூறி ஊக்குவிக்கும் ஆய்வுக் கண்ணர்