பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு:மு. சாந்த மூர்த்தி, 229 காயிதே மில்லத் இசுமாயில்:- இவரைப் பற்றிப் பண்பாளர் என்ற தலைப்பில் ஐந்து பாடல்கள் வெளிவந்துள்ளன. உருவத்தில் எளிமைதரும் பண்புத் தோற்றம் உள்ளத்தால் உரங்கொண்ட நினைவுச் செம்மை திருமறையின் வழிபேணும் அறத்தின் வேந்தர் தென்னாட்டில் இசுலாத்தின் முழுமைச் செல்வர் அருட்பார்வை கொழிக்கின்ற அன்புப் பாதை ஆண்டவனின் வழியென்றே கூறும் கோமான் திருவாளர் காயிதே மில்லத் என்றால் தெரிகின்ற இசுமாயில் வடிவே தோன்றும் இன்றையப் பேச்சுக்குரிய எந்தக் கவிஞர் கவனத்திற்கும் வராத இசுலாமியப் பெருமகன் கவிஞர் சாந்த மூர்த்தியின் கவனத்திற்கு வந்து பாடல் பெறுகின்றார். சென்னை அரசு பெண்கள் கல்லூரியின் பெயரை, "காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி" என்று பெயரிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளது தமிழக அரசு. செத்தும் கொடுத்த சீதக்காதிக்குப்பின்னர் இவர் திருநாமம் வரலாற்றில் இடம்பெறுகின்றது. பேரறிஞர் அண்ணா:- பேரறிஞர் என்ற தலைப்பில் அண்ணாவைப் பற்றி ஐந்து பாடல்கள் உள்ளன. ஐந்தும் எண்சீர் விருத்தங்களேயாகும். தம்பிக்கு மடலெழுதித் தமிழின் போக்கில் தனித்தன்மை தந்தவரே அறிஞர் என்று செம்மாந்து சொல்கின்ற சிறப்பின் தூயர் செந்தமிழர் மேடையிலே பொலிவு தந்து நம்பிக்கைச் சின்னமென வாழ்ந்த நல்லார் நடைமெலிந்த சமுதாயக் குலைவை எண்ணி வெம்பித்தான் திருத்துதற்கு விழைந்த வீரர் வீறுமொழிப் பேரறிஞர் அண்ணா ஆவார் தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்றே கல்கி தேர்ந்துரைத்த மொழிக்குள்ளே ஆற்றல் தந்தார் அன்பாகத் தமிழ்நாடு பெயரைக் காண ஆருயிரின் துயர்மறந்து வாழ்ந்த செம்மல் நன்றான குறளின்பம் மேலை நாட்டார் நன்குணரப் பல்கலையில் கழகம் தன்னில் சென்றுரைத்த சிறப்பெல்லாம் அமெரிக் காவின் சிறந்த ஏல் கழகம்தான் சொல்லு மன்றோ !