பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு:மு. சாந்த மூர்த்தி, 233 தோறும் எடுத்துக் கூறி அறிஞர் அண்ணா என்று சுட்டிக் காட்டி அப்பெயர் நிலைக்கச் செய்தார். கவிஞர் தம் பணியினின்னும் ஓய்வு பெற்ற பிறகு நாடெங்கும் சுற்றி வந்தார். நான் துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த போதுஇரண்டு நாட்கள் என் இல்லத்தில் விருந்தினராகத் தங்கும் பேறுபெற்றேன்.பள்ளியில் கூட்டம் அமைத்துப்பேசச் செய்தேன். ஊரே திரண்டு வந்தது. ஊருக்குள் இரண்டு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து பேச வைத்தேன். துறையூரில் பெரும்பாலோர் திராவிடக் கழகச் சார்புடையவர்கள். ஆகையால் இவர் பேசும் கூட்டங்களில் மக்கள் திரண்டு வந்து கேட்டு மகிழ்வர். டாக்டர் சாந்தமூர்த்தி கவிதை நூல் என்று தம் கவிதைகளைத் தொகுத்து வெளியிடவில்லை. எனினும் கணிசமான அளவுக்குப் பாடித் தம்மை ஓர் மரபுக் கவிஞர் என்று இனங்காட்டியுள்ளார். சில புதுக்கவிதைகளும் அச்சாகியுள்ளன. இத்துடன் இவர் பற்றிய கவிதைச்சிறப்பை நிறைவு செய்கின்றேன்.