பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுக் கவிதை 43 அணிநலன்கள்: கவிதைக்கு அழகு செய்வன அதில் خمبهمي அமையும் அணிகள், உவமையும் உருவகமுமே பெரும்பாலும் கையாளப் பெற்று வருகின்றன. தாமரை முகம் என்ற தொடரை முகத்தாமரை என்று மாற்றியமைத்தால் உருவகமாகி விடுகின்றது. பால் செறிந்து பாலாடையாவது போல அடங்கிச் செறிந்த உவமையே (condensed simite) உருவகம் ஆகிறது. உவமையே பிற்காலத்தில் தோன்றிய நூற்றுக் கணக்கான அணிகட்கும் தாய். இதனை அப்பைய தீட்சிதர் என்ற வடமொழிப் புலவர் தமது சித்திர மீமாம்சையில், உவமை என்னும் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கில் கவினுறத் தோன்றி யாப்பறி புலவர் இதயம் நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே. என்று அற்புதமாகக் கூறுவர். கவிதைகளில் உவமை முதலிய அணிகளைச் சிறந்த புலவர்கள் முயன்று சேர்ப்பதில்லை. அவர்கள் கற்பனையில் ஒரு தன்மையாகத் தோன்றி இயையும் பொருள்கள் தாமே வந்து பொருந்தி உவமை முதலிய அணிகளாக அமைந்து விடுகின்றன. உணர்த்தும் உண்மை: கவிதையின் தலைமைப் பண்பு. அஃது உணர்த்தும் உண்மையில்தான் உள்ளது. செய்தி கூறாத கவிதை வெற்றெனத் தொடுத்தலாகும். உயிரில்லாத சடம் போன்றது. நல்லது செய்தல் ஆற்றி ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின் என்பது போன்ற, அனைவருக்கும் இன்றியமையாத உண்மை போன்றவை கவிதையில் அமைதல் வேண்டும். மரபுக் கவிதையாயினும் இன்றையக் கவிஞர்கள் ஏதோ ஒரு கருத்தைக் கவிதைகள் மூலம் மக்களுக்கு உணர்த்துகின்றனர். இந்த நோக்கத்தை முக்கியமானதாகக் கொண்டே கவிதைகளைப் படைக்கின்றனர். இவ்வாறு கூறிய கருத்துக்களின் அடிப்படையில் மரபுக் கவிதைகளைப் படைத்துவரும் வாழும் கவிஞர்களில் சிலர்தம் கவிதைகளை ஆராய்வோம். நான் எடுத்துக்கொண்ட வாழும் மரபுக் கவிஞர்களை அவர்கள் பிறந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் படைப்புகளை ஆராய விரும்புகிறேன். அவர்கள் வருமாறு.