உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. வைரமுத்து 255 செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே-அடி விஞ்ஞானம் தினந்தோறும் தேடல் கொள்ளும்-உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்-அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்? இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என் இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன் கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என் காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன் துண்டுதுண்டாய் உடைந்தமனத் துகள்கள் எல்லாம்-அடி துயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன் கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும் குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம் கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம் முடிமுடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண் முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி ஒடிஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே-நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி இவை கற்பனை செறிந்த அற்புதமான பாடல்கள். கற்பனையும் கருத்துவளமும் பின்னிப்பின்னி படிப்போருக்குச் சுவையூட்டி மகிழ்விக்கின்றன. 'வா என்ற தலைப்பில் உள்ள கவிதையிலும் காதல் மணம் வீசுகிறது. கவிஞரின் கற்பனைக் காதலி முதலில் உற்சாகம் காட்டிப் பின்னர் பின்வாங்குகின்றாள். கவிஞரின் வா என்ற அறைகூவலைக் கவிதை பேசுகின்றது. இனிமேலும் இளமைக்குப் பொறுமை இல்லை இற்றுவிட்ட இதயத்தில் வலிமை இல்லை தனிமைக்கு எனைமட்டும் பிடிக்க வில்லை தவறென்ன தர்மமென்ன விளங்க வில்லை. என்று கவிதை தொடங்கி மனிதர்க்கு நிலையான சட்டம் இல்லை மாறுவதால் பூமிக்கு நட்டம் இல்லை. என்று வழியமைத்துக் காட்டுவார். கண்ணுக்குள் நீயிருந்தும் உறக்க மென்ன? கற்பூர தேகந்தான் கரைவ தென்ன? பின்நோக்கி உன்கால்கள் நடப்ப தென்ன? பிரியத்தைப் புடவைக்குள் மறைப்ப தென்ன?